Home /News /lifestyle /

இணையத்தை கலக்கும் வனிதா விஜயகுமாரின் யூடியூப் ஸ்பெஷல் ஃபீப் பிரியாணி!

இணையத்தை கலக்கும் வனிதா விஜயகுமாரின் யூடியூப் ஸ்பெஷல் ஃபீப் பிரியாணி!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் வெளியிட்ட மலபார் ஸ்பெஷல் கேரளா ஃபீப் பிரியாணி வீடியோ லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வனிதா விஜயகுமாரின் யூடியூப் சேனலில் பகிரப்படும் சமையல் வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதுவரை இந்த யூடியூப் சேனலில் வனிதா பல்வேறு வகையான பிரியாணிகளை செய்து காட்டி அசத்தியுள்ளார். அந்த வகையில் சர்ச்சைகளை பற்றி கவலைப்படாமல் கேரள ஸ்பெஷலான ஃபீப் பிரியாணியை சமைத்து காட்டி அதை வீடியோவில் டேஸ்டும் செய்துள்ளார்.

    சர்ச்சை நாயகி வனிதா எது செய்தாலும் அதை ரசிக்க ஒருகூட்டம் இணையத்தில் இருக்கிறது. வனிதாவின் வெயிட் லாஸ், பியூட்டி டிப்ஸ், ட்ரெஸ்ஸிங் என தனியாக பொட்டிக் நடத்தும் அளவுக்கு வனிதா விஜயகுமார் குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளார். அதிலும் அவரிடம் இருக்கும் சமையல் திறமை அசாத்தியமான ஒன்று. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளியில் இவரின் சமையல் கலையை கண்டு வியந்து போகாதவர்களே இல்லை எனலாம்.

    அந்த அளவுக்கு வனிதா தனது சமையலால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார். வனிதா விஜயகுமார் என்ற யூடியூப் சேனலில் தனியாக தனது சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் 2 நாட்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் வெளியிட்ட மலபார் ஸ்பெஷல் கேரளா ஃபீப் பிரியாணி வீடியோ லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.

    ஃபீப் சாப்பிடுபவர்கள் எப்படி வீட்டிலே ஈஸியாக ஃபீப் பிரியாணி செய்யலாம் என்பதை செய்து காட்டி இருக்கிறார். முதலில் இந்த ஃபீப் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை ற்றி பார்ப்ப்போம்.

    ஃபீப், பாசுமதி அரிசி, நெய், வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள், புதினா , கொத்தமல்லி, கரம் மசாலா தூள், தேங்காய் எண்ணெய், முந்திரி, தயிர், உப்பு தேவையான அளவு.

    செய்முறை:

    இந்த பிரியாணியை மலபார் பகுதியில் கிடைக்கும் தலைச்சேரி பிரியாணி எனவும் அழைப்பர். அதனால் அந்த ஊரின் பாரம்பரிய முறைப்படியே வனிதா இந்த பிரியாணியை தேங்காய் எண்ணெய்யில் செய்து காட்டியுள்ளார்.



    முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாஸ்மதி அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் எண்ணெய், கரம் மசாலா பொருட்கள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதி வந்ததும் அதில் அரிசி சேர்த்து பிரியாணி பக்குவத்துக்கு சாதத்தை வடித்து கொள்ள வேண்டும்.

    பின்பு, குக்கரில் நெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் பிரியாணி மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும்.

    அது வெடித்தது, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இப்போது உப்பு சேர்த்து அதில் தக்களி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

    பின்பு அதில் ஃபீப் கறியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 8 - 9 விசில் விட்டு பஞ்சு போல் வேக வைக்க வேண்டும்.

    கறி நன்கு வெந்த பின்பு, அதில் சிக்கன் - மட்டன் மாசாலா தூளை காரத்திற்கு ஏற்ப சேர்க்க வேண்டும்., பின்பு கொத்த மல்லி, புதினா , தயிர் சேர்த்து இறுதியாக கரம் மசாலா தூளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

    இதற்கிடையில் நெய்யில் தனியாக முந்திரி மற்றும் வெங்காயத்தை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பிரியாணியை செட் செய்யும் முறை.

    ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் வேக வைத்த பாசுமதி அரிசி, ஃபீப் தொக்கு, முந்திரி, பொரித்த வெங்காயம் சேர்க்க வேண்டும். இப்படியே 3 முறை லேயராக தொடர்ந்து செட் செய்ய வேண்டும். கடைசியாக 1 கப் தேங்காய் பாலை ஊற்றி பாத்திரத்தை மூடி 10 நிமிடத்திற்கு தம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஃபீப் பிரியாணி ரெடி. இதில் ஃபீப்க்கு பதில் மட்டனையும் சேர்த்து செய்யலாம்.

    வனிதாவின் இந்த ஃபீப் பிரியாணிக்கு எதிர்மறையான பல நெகட்வ் கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன, ஆனாலும் வனிதா அதைப்பற்றி எல்லா கவலைப்படாமல் உணவு அவரவர்களின் விருப்பம் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Cooking tips, Vanitha Vijayakumar

    அடுத்த செய்தி