வல்லாரை இரத்த விருத்தியை தந்து நரம்புகளைப் பலம் பெறச் செய்கிறது. சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது.வல்லாரை இரத்தத்தில் இரத்தச் சிவப்பணுக்கள் கூட்டுவதோடு, இரத்தத்தின் திறனும் புரதத்தின் அளவும் கூட்டும். இரத்தத்தில் ஹிமோகுளோப்பின் அளவும் உயரும்.
தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை 1 கப்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 3
பூண்டு 5 பல்
பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
உப்பு சிறிதளவு
எண்ணை 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் போட்டு தாளித்து பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பெருங்காயம் போட்டு பொடியாய் நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைத்து எடுக்க வேண்டும். கீரை வெந்ததும் அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கீரை ஆறின பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது வல்லாரை கீரை பொரியல் ரெடி....
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.