உடல் எடையை குறைக்க பல டயட் முறைகளை முயற்சி செய்வோருக்கு இந்த கஞ்சி உதவலாம். இது ஆரோக்கியமானது மட்டுமன்றி நீண்ட நேரம் பசியும் எடுக்காது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரை கீரை - 1 கொத்து
புழுங்கல் அரிசி - 1/4 கப்
திணை அரிசி - 1/2 கப்
குதிரை வாலி - 1/2 கப்
சீரகம் - 1 tsp
மிளகு - 1/4 tsp
தனியா தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - 1/4 கப்
எண்ணெய் -2 tsp
பூண்டு - 2 பல்
செய்முறை :
முதலில் மூன்று அரிசியையும் ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதை கழுவி குக்கரில் சேர்த்து சின்ன வெங்காயம் 6, பூண்டு பல், சீரகம், உப்பு மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்.
பின் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் வல்லாரை கீரையையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். நன்கு வதங்கியதும் கஞ்சியில் கொட்டி நன்கு கலந்துகொள்ளுங்கள்.
அவ்வளவுதான் வல்லாரை கீரை கஞ்சி தயார்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.