Lovers Day Special: வேலண்டைன் சாக்லெட் பேன்கேக்

அன்பால் சுவை கூட்டி உங்கள் கைகளால் செய்து கொடுத்து துணையை ஆனந்தப்படுத்துங்கள்

Lovers Day Special: வேலண்டைன் சாக்லெட் பேன்கேக்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 13, 2019, 5:23 PM IST
  • Share this:
காதலர் தினத்தில் உங்கள் துணைக்கு சாக்லெட், கேக் என கடையில் வாங்கிக் கொடுப்பதை விட இப்படி வீட்டிலேயே அன்பால் பார்த்துப் பார்த்து உங்கள் கைகளால் செய்து கொடுத்தால் உங்கள் துணை எப்படி மகிழ்வார்கள் தெரியுமா? அந்த ஆனந்தத்தை நேரில் காண இந்த ரெசிப்பியை செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1 1/2 கப்


பால் - 1 1/4 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்பேக்கிங் சோடா - 2 tsp
முட்டை - 1
வெண்ணெய் - 2 tsp
உப்பு - ஒரு சிட்டிகை
விப்பட் கிரீம் - அலங்காரத்திற்கு
ஓரியோ - அரைத்தது
சாக்லெட் சாஸ் - அலங்காரத் தேவைக்கு



செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை (அரைத்தது) பேக்கிங் சோடா , கோகோ பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்குக் கலந்து கொள்ளவும்.

பின் பாலில் முட்டை மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அந்தக் கலவையில் மைதாமாவுக் கலவையைச் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

பின் ஒரு தவாவில் வெண்ணெய் தடவி மைதா கலவையை வட்டங்களாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி பெரிதான வட்டம் தொடங்கி சிறிய வட்டம் என நான்கு ரொட்டிகளாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த வட்டங்களை அடுக்கினால் கோபுரம் போல் வர வேண்டும். அந்த கேக் வட்டங்களை ஒவ்வொன்றாக தவாவில் வாட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக வாட்டிய கேக்குகளை பெரிய வட்டத்தின் மேல் விப்பட் க்ரீம் தடவுங்கள் அதன் மேல் மூன்றாவது கேக் வையுங்கள். பின் அதன் மேல் விப்பட் க்ரீம் தடவுங்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்யுங்கள்.

பின் அந்த கேக் கோபுரத்தின் மீது ஓரியோ தூள்களைத் தூவி சாக்லெட் சாசை அப்படியே அதன் மேல் ஊற்றி அலங்காரம் செய்யுங்கள்.

தற்போது சுவையான சாக்லெட் பேன்கேக் தயார்.
First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்