வீட்டில் இட்லி மாவு இல்லாத நேரங்களில் ஜவ்வரிசி மற்றும் ரவையை வைத்து மல்லிப்பூ மாதிரியான இட்லியை செய்திடலாம். அதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மாவு ஜவ்வரிசி – 100 கிராம்
ரவை – ஒன்றரை கப்
உப்பு – தேவையான அளவு
அரைக்க:
கேரட் – 1
புதினா இலை – அரை கைப்பிடி
கருவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 1டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தயிர் – அரை கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
இஞ்சி – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 நறுக்கிய
குடைமிளகாய் – 1 நறுக்கிய
செய்முறை:
1. முதலில் 100 கிராம் மாவு ஜவ்வரிசியையும் ஒன்றை கப் அளவிற்கு வறுத்த அல்லது வறுக்காத ரவை என ஏதேனும் ஒன்றை சேர்த்து நன்கு நைசாக பவுடர் போல மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. அரைத்து எடுத்த இந்த பவுடரை ஒரு மிக்ஸிங் பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள்.
3. பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் புதினா இலைகளையும் , கருவேப்பிலை இலைகளையும் சேர்த்துக் காரத்திற்கு தேவையான அளவிற்கு பச்சை மிளகாயையும் போட்டுக் கொள்ள வேண்டும்.
5. பின் சீரகம் மற்றும் சோம்பை சேர்த்து, ஒரே ஒரு மீடியம் சைஸ் கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. அரைத்து எடுத்த இந்த பேஸ்ட்டை மாவுடன் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் அதனுடன் கெட்டியான புளிக்காத தயிர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
7. பின்னர் அதில் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதனை அப்படியே இருபது நிமிடம் ஊற விட்டு விடுங்கள்.
8. பின்னர் இதனுடன் துருவிய இஞ்சி ஒரு ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி அளவிற்கு குடைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கலாம்.
9. பின்னர் இட்லி மாவு போல கெட்டியான பதத்திற்கு வர தேவைக்கு ஏற்ப கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இட்லி தட்டில் இந்த மாவை ஊற்றி பத்து நிமிடம் நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
10. இப்போது சுட சுட மல்லிப்பூ இட்லி ரெடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.