முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உருளைகிழங்கு ஆம்லெட் செஞ்சுருக்கீங்களா? இதை ட்ரை பண்ணுங்க..!

உருளைகிழங்கு ஆம்லெட் செஞ்சுருக்கீங்களா? இதை ட்ரை பண்ணுங்க..!

உருளைகிழங்கு ஆம்லெட்

உருளைகிழங்கு ஆம்லெட்

Potato omelet | பொதுவாக பலரும் முட்டையை பொடிமாசாகவோ, அவிச்ச முட்டையாகவோ, ஆஃப் பாயிலாகவோ, கலக்கியாகவோ, அல்லது ஆம்லெட் ஆக செய்து உண்பது வழக்கம். ஆனால் நாம் முட்டையுடன் உருளைக்கிழங்கை சேர்த்து உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் ஆம்லெட் செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை - 5

உருளைக்கிழங்கு - 2

மிளகாய் - 5

பெ.வெங்காயம் - 1

வெண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை

1. முதலில் கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

3.அதன்பின்னர் நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.

4.நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

First published:

Tags: Egg, Food, Omlet