தினமும் ஒரே மாதிரியான டிபன் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? விதவிதமான ஊத்தப்பம் ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க!

ஊத்தப்பம்

வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான ரெகுலர் ஊத்தாப்பங்களை செய்து தருவதை விட கொஞ்சம் வித்தியாசமாக செய்து தர நினைத்தால் இப்படி பிரட் ஊத்தப்பம்,பீட்ஸா உத்தப்பம்,ஓட்ஸ் ஊத்தப்பம் செய்து கொடுங்கள்.

  • Share this:
தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஊத்தப்பம் ஆகியவை தான் விரும்பி சாப்பிடும் டிபன் வகைகள். அதிலும் வெங்காய ஊத்தப்பம், வெஜிடபிள் ஊத்தப்பம் ஆகியவை அனைத்து இந்திய மக்களாலும் விரும்பி சாப்பிட கூடிய உணவு ஆகும். இருப்பினும் ஊத்தாப்பங்களை இன்னும் பலவிதமாக செய்து சாப்பிடலாம். அதற்கு அரிசிமாவு தேவைப்படாது. வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான ரெகுலர் ஊத்தாப்பங்களை செய்து தருவதை விட கொஞ்சம் வித்தியாசமாக செய்து தர நினைத்தால் கீழ்காணும் ரெசிபிக்களை செய்து அசத்துங்கள்.

1. பிரட் ஊத்தப்பம்

வீட்டில் உத்தப்பம் செய்ய அரிசி மாவு தயார் செய்யவில்லை என்றால், கவலை வேண்டாம் அரிசி மாவு இல்லாமலேயே பிரட் வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 6 முதல் 8
ரவை - 1/4 கப்
மைதா - 3 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நறுக்கிய தக்காளி - 1/4 கப்
நறுக்கிய கேப்சிகம் - 1/4 கப்
நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவுசெய்முறை:

ஒரு பிளெண்டரில், பிரட் துண்டுகள், மைதா, ரவை, தயிர், 3/4 கப் தண்ணீர் சேர்த்து மிருதுவாகும் வரை அரைக்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, கேப்சிகம், இஞ்சி ,பச்சைமிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்க்கவும். மேலும் உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். இப்பொது தோசை தவாவை வைத்து ஊத்தப்பம் ஊற்றி எடுத்து அதனை காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.

2. ஓட்ஸ் ஊத்தப்பம்:

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
ரவை - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - ஒரு பிஞ்ச்
எண்ணெய் - தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நறுக்கிய தக்காளி - 1/4 கப்
நறுக்கிய கேப்சிகம் - 1/4 கப்
நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, ரவை, தண்ணீர் ஆகியவற்றை கலந்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, தண்ணீர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதனை மாவு கலவையில் சேர்க்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி., கேப்ஸிகம், ஆகியவற்றை மாவு கலவையில் சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் மாவு ரெடி, ஒரு தோசை தவாவை வைத்து ஊத்தப்பம் ஊற்றி அதனை சட்னி சாம்பாருடன் சூடாக பரிமாறலாம்.

ரோஸ் சர்பத், ரோஸ் மில்க், ரோஸ் லஸி.... ரோஸ் சிரப் கொண்டு இத்தனை சம்மர் டிரிங்க்ஸ் செய்யலாமா..?

3. பீட்ஸா உத்தப்பம்

தேவையான பொருட்கள்:

ரவை - 2 கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கேரட் - 1
பீட்சா சாஸ் - 1/2 கப்
துருவிய சீஸ் - 1 கப்
பீட்ஸா சீசனிங் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவுசெய்முறை:

ஒரு பாத்திரத்தில், ரவை, தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.அதனை சுமார் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். ஒரு சூடான தவாவில் மாவினை ஊற்றவும். மிருதுவாக இருக்கும் வரை இருபுறமும் சமைக்கவும் வேண்டும். அதனை தவாவில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும். இப்போது ஊத்தப்பம் பேஸ் மேல் சாஸ் தடவி நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, கேரட் ஆகிய காய்கறிகளை பரப்பி விடவும். பிறகு அதன்மேல் துருவிய சீஸை பரப்பவும். மீண்டும் சில நிமிடங்களுக்கு ஊத்தாப்பத்தை சூடாக்கி பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி சீசனிங் செய்து சூடாக பரிமாறலாம்.

 
Published by:Sivaranjani E
First published: