Mutton Recipe | உப்புகண்டத்தை பொதுவாக நன்றாக வெயில் அடிக்கும் கோடையில் செய்து வைத்து விட்டு மழைகாலத்தில் பொரித்தோ அல்லது உப்புகண்டம் குழம்பு வைத்தோ சாப்பிடுவார்கள்.
மட்டன் உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காயவைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். இதனை தென் மாவட்ட கிராமங்களில் இன்றும் செய்து சாப்பிட்டு வருகின்றனர். உப்புக்கண்டம் எளிதாக செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் – 1 கிலோ
பூண்டு – 20 பல்,
காய்ந்த மிளகாய் – 15
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. மட்டனை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
2. பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
3. இந்த விழுதினை நறுக்கி வைத்த மட்டன் கறியில் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. இந்த மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். அதனால் இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும்.
5. ஈரம் வற்றும் வரை இரண்டு மூன்று நாட்கள் நன்றாக வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
6. ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது. தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.
7. இதில் உப்புகண்டம் குழம்பும் வைக்கலாம். ருசியாக இருக்கும்...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.