குழந்தைகளுக்கான சத்தான உணவு எது..? யுனிசெஃப் பரிந்துரைத்த உணவுப் பட்டியல்..!

குழந்தைகளுக்கான சத்தான உணவு எது..?

தேசிய ஊட்டச்சத்து கருத்துக் கணிப்பில் (National Nutrition Survey ) ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள 32% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுள்ளனர் என்று கூறியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
யுனிசெஃப் குழந்தைகள் எந்தெந்த ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆராய்ந்து அதற்கு ஏற்ப உணவுப் பட்டியலை உருவாக்கியுள்ளது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

2016 -18 வரை எடுக்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து கருத்துக் கணிப்பில் (National Nutrition Survey ) ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள 32% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுள்ளனர் என்று கூறியுள்ளது. அதில் 17% குழந்தைகள் உணவை வீணாக்குவதாகவும், 33 % குழந்தைகள் எடைக் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அந்தக் குழந்தைகளில் 40 சதவீதம் பெண் குழந்தைகளுக்கும் , 18 சதவீதம் ஆண் குழந்தைகளுக்கும் அனீமியா தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அதிக எடை உயர்வு, உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இதனைக் கருத்தில் கொண்டே யுனிசெஃப் இந்த உணவுப் பட்டியலை பரிந்துரைத்துள்ளது. அதில் உருளைக் கிழங்கு பூரணம் கொண்ட பராதா, பனீர் கத்தி ரோல், ஜவ்வரிசி கட்லெட் ஆகியவற்றை பரிந்துரைக்கிறது.

அடுத்ததாக பச்சை பயறு , அவல் , காய்கறிக் கலவைக் கொண்ட உப்புமா, சூப் பட்டியலிட்டுள்ளது.

அசைவ உணவுகளில் முட்டை, இறைச்சி, மீன் போன்ற புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளை தரலாம் என்கிறது. அடுத்ததாக நட்ஸ் வகைகள், ஆரஞ்சு, பச்சைக் காய்கறிகள், பழங்களும் தரலாம் என்கிறது.

இந்த உணவுகள் அனைத்துமே வெறும் உணவு மட்டும் அல்ல. அதில் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் C , கால்சியம் என ஊட்டச்சத்துகள் நிறைவாக உள்ள உணவுகளை பரிந்துரை செய்துள்ளது.

அதேசமயம் ஜங் புஃட் தருவதை தவிறுங்கள். குழந்தைகள் கேட்டாலும் ஊக்குவிக்காதீர்கள் என்று கூறுகிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Sivaranjani E
First published: