• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உளுந்து களி.. காலை உணவுக்கு சிறந்தது...

உளுந்து களி.. காலை உணவுக்கு சிறந்தது...

உடலுக்கு வலிமையை தரும் உளுந்தங்களி செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Share this:
உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களி எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

தேவையான பொருட்கள்

உளுந்து – 1/2 கப்

அரிசி – 1 மேஜைக்கரண்டி

வெல்லம் அல்லது கருப்பட்டி, பொடித்து – 1/2 கப் + 1 மேஜைக்கரண்டி

நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

செய்முறை

உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். ஆறியபின் மிக்சியில் நைசான மாவாக அரைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெள்ளம்/ கருப்பட்டி சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு கரண்டி கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.

மேலும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும். கை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும். கிண்டும் பொழுது, ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும். களி வெந்து, ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், கையை தண்ணீரில் நினைத்து, களியை தொட்டுப்பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.



குறிப்புகள்

1. உளுந்தும், அரிசியும் வருக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள் வரை வறுபடும் .

2. எண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.

3. உருண்டைகளாக உருட்டியோ அல்லது அப்படியேவும் கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க... திருக்கார்த்திகைக்கு சொஜ்ஜி அப்பம் செய்து பாருங்களேன்!

திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை செய்வது எப்படி?

திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்ய ரெசிபி!      

திருக்கார்த்திகைக்கு கடலை உருண்டை செய்யலாம்... 

சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயாசம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: