அடியில் மீந்துபோன ஊறுகாய் மசாலாவை வைத்து இப்படி ஒரு விஷயம் செய்யலாமா..? இது தெரியாம போச்சே..!

ஊறுகாய்

ஊறுகாய் எத்தனை மாதங்கள் கடந்தாலும் சுவை தரும். குறிப்பாக அடியில் மீறும் ஊறுகாய் மசாலா தனி சுவை கொடுக்கும்.

  • Share this:
ஊறுகாய் இல்லாமல் இந்திய உணவு முழுமை பெறாது. என்னதால் பல வகையான பொரியல் கூட்டு இருந்தாலும் பந்தியில் ஊறுகாய் - க்குதான் முன்னுரிமை. அனைவரின் வீடுகளிலும் ஊறுகாய் இல்லாமல் இருக்காது. குறிப்பாக கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே செய்யும் ஊறுகாய்க்கு என்றுமே தனி ருசிதான். மசாலாக்கள் ஊறி ஊறி கிடைக்கும் அந்த சுவைக்கு அளவிருக்காது.

ஊறுகாய் எத்தனை மாதங்கள் கடந்தாலும் சுவை தரும். குறிப்பாக அடியில் மீறும் ஊறுகாய் மசாலா தனி சுவை கொடுக்கும். ஆனால் அதை அந்த காலத்து பாட்டிகள் கீழே கொட்ட மாட்டார்கள். அதை வைத்தும் அருமையான விஷயங்களை செய்வார்கள். அதில் பெரும்பாலும் செய்வதுதான் வெங்காய ஊறுகாய்.

இதை பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுடா திவேகர் பகிர்ந்துள்ளார். அதாவது அவர் நம் பாட்டிகள் உணவை வீணடிக்கக் கூடாது என்ற தத்துவத்தின் கீழ் உணவு முறையை பின்பற்றியவர்கள். அது பழைய சோறாக இருந்தாலும் சரி..ஊறுகாயாக இருந்தாலும் சரி...அப்படி மீந்து போனா ஊறுகாய் மசாலாவை வைத்து என் மாமியார், அம்மா அருமையான வெங்காய ஊறுகாய் செய்வார்கள் என பகிர்ந்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar)






அதாவது மீந்த ஊறுகாய் மசாலாவில் சின்ன வெங்காயத்தை உரித்து அந்த மசாலாவில் போட்டு மிக்ஸ் செய்யுங்கள். பின் அதை இரண்டு நாட்களுக்கு வெயிலில் வைத்து எடுத்து பயன்படுத்தினால் மசாலாவில் ஊறிய அந்த சின்ன வெங்காயம் நாவை விட்டு நீங்கா சுவை தரும் எனக் கூறுகிறார். இதை தினம் சாப்பிடும் உணவுக்கு தொட்டுக்கொள்ளலாம். அதில் இருக்கும் ஊட்டச்சத்தும் ஏராளம் என்கிறார்.

வாழைப்பூவில் சப்பாத்தி செஞ்சிருக்கீங்களா..? டின்னருக்கு டிரை பண்ணி பாருங்க..!

இதை நீங்களும் அடுத்த முறை டிரை பண்ணி பாருங்க...உணவை வீணடிக்க கூடாது என நினைப்பர் எனில் இது உங்களுக்கு நிச்சயம் உதவும்.

 

 
Published by:Sivaranjani E
First published: