முகப்பு /செய்தி /lifestyle / இந்தியாவில் இத்தனை வகை பிரியாணியா! - உலக பிரியாணி தின ஸ்பெஷல்

இந்தியாவில் இத்தனை வகை பிரியாணியா! - உலக பிரியாணி தின ஸ்பெஷல்

உலக பிரியாணி தினம்

உலக பிரியாணி தினம்

World briyani day: இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கெடச்சது… இந்தியாவின் பிரியாணியில் இவ்வளவு இருக்குதா என ஆச்சரியப்படவைக்கும் லிஸ்ட்.

  • Last Updated :

இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கெடச்சது… என்று பாடும் வரிக்கு ஏற்ப இந்த வாழ்கையே நன்றாக ருசித்து சாப்பிடத்தான். அதுவும் பிரியாணி என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள். 3 வேளையும் பிரியாணி கொடுத்தாலும் நன்றாக சாப்பிட எப்போதும் 1 கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். 

பாய் வீட்டு மட்டன் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, சீராக சம்பா பிரியாணி என்றால் எச்சில் ஊராத வாயே இருக்காது. அந்த பிரியாணிக்கு 1 நாள் என்றால் அதை சும்மா விடுவோமா? 

பிரியாணி பிரியர்களுக்காக ஒரு பிரியாணி தினம் - என்ற முடிவை சமீபத்தில் பிரியாணி அரிசி தயாரிக்கும் பிரபல தனியார் நிறுவனமான எல்டி ஃபுட்ஸ் அறிவித்தது. ஆண்டுதோறும் ஜூலை 3ஆம் தேதியை பிரியாணி தினமாக கடைப்பிடிப்போம் என்று அறிவித்தது

வரலாற்றின் பக்கங்களில் பிரியாணி..

பிரியாணி என்ற சொல் பாரசீக வார்த்தையான பிரியன் என்பதிலிருந்து உருவானது, அதாவது 'சமைப்பதற்கு முன் வறுத்தது ' என்று பொருள். அரிசிக்கான பாரசீக வார்த்தை பிரிஞ்ச். இந்த சுவையான உணவின் தோற்றம் தொடர்பான பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. 

பல வரலாற்றாசிரியர்கள் பிரியாணி பெர்சியாவிலிருந்து தோன்றியதாகவும், முகலாயர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் நம்புகிறார்கள். முகலாய அரச சமையலறையில் பிரியாணி மிகுந்த சுவையோடு, வகை வகையாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்றளவும் தென் இந்தியாவிற்கு ஹைதராபாத் பிரியாணி போல் வட இந்தியாவிற்கு முகல் பிரியாணி தான்.

வாழ்க்கைப் பாடங்கள் சொல்லும் கார்ட்டூன் கேரக்டர்கள்

பிரியாணியின்  தொடர்புடைய பல புராணக்கதைகள் உள்ளன. ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தொடர்பான கதை பிரபலமான ஒன்று உள்ளது. மும்தாஜ் இராணுவ முகாம்களுக்குச் சென்றபோது, முகலாயப் படைவீரர்கள் ஊட்டமின்றி காணப்பட்டனர். வீரர்களுக்கு சரிவிகித உணவை வழங்குவதற்காக, சமையல்காரர்களை இறைச்சி மற்றும் அரிசியுடன் கூடிய உணவைத் தயாரிக்கச் சொன்னார். இந்த உணவு மசாலா மற்றும் குங்குமப்பூவுடன் விறகு தீயில் சமைக்கப்பட்டது. ஒற்றைப் பானையில் மசாலாக்களோடு அரிசியும் சேர்த்து சமைக்கும் உணவாக இது இருந்தது.

1398 ஆம் ஆண்டு துருக்கிய-மங்கோலிய வெற்றியாளரான தைமூரில் பிரியாணி இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது என்று மற்றொரு புராணக்கதை கூறுகிறது. ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் லக்னோ நவாப்கள் கூட இந்த சுவையான உணவைப் பாராட்டியதற்காக அறியப்படுகிறது.

இந்தியாவின் சில பிரியாணி வகைகள் இதோ:

முகலாய் பிரியாணி 

முகலாய் பிரியாணி

முகலாயப் பேரரசர்கள் ஆடம்பரமான உணவு அனுபவங்களை மிகவும் விரும்பினர். சமையல் கலையைப் பாராட்டினர். பாரம்பரிய முகலாய் பிரியாணி, இரைச்சியோடு கேவ்ரா நறுமணம் கொண்ட சாதம் கலந்து செய்யப்படும். ஆடம்பரமாக தட்டுகளில் முந்திரி குங்குமப்பூவை தூவி பரிமாறப்படும்.

லக்னோ பிரியாணி 

லக்னோ பிரியாணி

லக்னோவின் பிரியாணி 'புக்கி' பிரியாணி என்று அழைக்கப்படுகிறது. 'புக்கி' பாணியில், இறைச்சி மற்றும் அரிசி தனித்தனியாக சமைக்கப்பட்டு, இறுதியில் ஒரு செப்பு பாத்திரத்தில் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்படுகிறது. ஆவாதி பிரியாணி என்றும் அழைக்கப்படும், பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த ஆவாத்தின் நவாப்களால் இந்த உணவு பிரபலமானது.

கொல்கத்தா பிரியாணி 

கொல்கத்தா பிரியாணி

ஆங்கிலேயர்களால் துரத்தப்பட்ட பிறகு, நவாப் வாஜித் அலி ஷா கல்கத்தா நகரில் தங்கியிருந்தபோது பிரியாணியை  உருவாக்கினார். அவர்களால் இறைச்சி வாங்க முடியாததால், உள்ளூர் சமையல்காரர்கள் நன்றாக சமைத்த பழுப்பு உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரியாணி சமைத்தனர். மசாலாப் பொருட்கள் குறைவாக சேர்த்து, தயிரோடு கலந்து அதில் இறைச்சியை ஊறவைத்து தனியாக சமைகின்றனர். இதை வெளிர் மஞ்சள் அரிசியிலிருந்து சேர்த்து பரிமாறும் வழக்கம் உள்ளது.

பம்பாய் பிரியாணி 

பம்பாய் பிரியாணி

காரமான மற்றும் சுவையான, பாம்பே பிரியாணி சுவைகளின் உருகும் பாத்திரமாகும். அப்படி ஒரு தனித்துவமான சுவை அதற்கு. உலர்ந்த பிளம்ஸ் மற்றும் கெவ்ரா தண்ணீர் பயன்படுத்தி செய்யப்படுவதால் கொஞ்சம் இனிப்பு சுவை கொடுக்கும்.

ஹைதராபாத் பிரியாணி 

ஹைதராபாத் பிரியாணி

பேரரசர் ஔரங்கசீப் நிஜா-உல்-முல்க்கை ஹைதராபாத்தின் புதிய ஆட்சியாளராக நியமித்த பிறகு புகழ்பெற்ற ஹைதராபாத் பிரியாணி உருவானது. அவரது சமையல்காரர்கள் மீன், இறால், காடை, மான் மற்றும் முயல் இறைச்சியைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 50 வெவ்வேறு வகை பிரியாணிகளை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. நறுமண குங்குமப்பூ இந்த உணவின் நட்சத்திரம். படித்தால் கூட எச்சி ஊற வைத்துவிடும்.

பெங்களூர் பிரியாணி 

பெங்களூர் பிரியாணி

பெரும்பாலான பெங்களூர் திருமணங்கள் மற்றும் வீடுகளில் சமைக்கப்படும் இந்த பிரியாணி, சிறப்பு ஜீரக சம்பா அரிசியை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது தான் அதன் சிறப்பே.

தலச்சேரி பிரியாணி 

இனிப்பு மற்றும் காரமான, தலச்சேரி பிரியாணி இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பிரியாணிகளில் ஒன்றாகும். இந்த பிரியாணி சமைக்க மென்மையான கோழி இறக்கைகள்(wings), மலபார் மசாலா மற்றும் கைமா அரிசி பயன்படுத்தப்படுகிறது.

top videos

    இதில் நீங்க என்னலாம் சாப்டிருக்கீங்க? நாங்கள் விட்ட பிரியாணி இருந்தால் சொல்லுங்க நாங்களும் சாப்பிட்டு பார்க்கிறோம்..

    First published:

    Tags: Briyani, Food