முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வறட்டு இருமல், சளி வராமல் இருக்க இதை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்...!

வறட்டு இருமல், சளி வராமல் இருக்க இதை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்...!

மஞ்சள் மிளகு பால்

மஞ்சள் மிளகு பால்

Turmeric Milk | பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோடைக்காலம் வந்தும் பனி பொழிந்துக் கொண்டிருப்பதால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி, இருமலால் மிகுந்த கஷ்ட்டப்படுகிறார்கள்.அவர்கள் மஞ்சள் மிளகு பாலைத் செய்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். சிலர் இதெல்லாம் ஓர் ரெசிபியா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் பலருக்கு மஞ்சள் மிளகு பாலை சரியான விகித முறையில் செய்யத் தெரியாது. இதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - 1 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

பனங்கற்கண்டு - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் மிளகு பால்

செய்முறை:

1. முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பால் நன்கு கொதித்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்த்து கரைய விட வேண்டும்.

2. பனங்கற்கண்டு கரைந்த பின், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் மிளகுத் தூளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், மஞ்சள் மிளகு பால் ரெடி.

பயன்கள்

1. பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

2. அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாயு தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

3. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

First published:

Tags: Cold, Dry Cough, Milk, Turmeric