முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சளியை சட்டுனு விரட்ட துளசி, புதினா டீயை குடிங்க.!

சளியை சட்டுனு விரட்ட துளசி, புதினா டீயை குடிங்க.!

துளசி - புதினா டீ

துளசி - புதினா டீ

துளசி மற்றும் புதினா சளித் தொல்லை, இருமல், ஆஸ்துமா, கப கோளாறு மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உடையது.!

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த மழைக்காலத்தில் வீட்டில் ஒருவருக்காவது சளி பிடித்துக் கொண்டு பாடாய் படுத்துகிறது.  அதற்கு துளசி மற்றும் புதினாவை நம் உணவில் சேர்த்துக் கொள்வது  இந்த பருவமாற்றத்தினை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

துளசியில் சளித் தொல்லை, இருமல், ஆஸ்துமா மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. மேலும் ஜீரண சக்தியை மேம்படுத்தும். புத்துணர்ச்சி மணமிக்க புதினா இலைகள் சளி, கப கோளாருகளுக்கு ஏற்றது. சரி இதை வைத்து டீ எப்படி போடலாம் என்று பார்க்கலாம்.

 தேவையான பொருட்கள்:

துளசி - 4 தளிர்

புதினா - 4 தளிர்

தண்ணீர் - 200 மில்லி

தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி - தேவையான அளவு

செய்முறை : 

ஃபிரெஷான துளசி, புதினா இரண்டையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். நன்கு சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி கலந்து பருகலாம்.

கூடுதல்  குறிப்பு : 

top videos

    துளசி மற்றும் புதினாவை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவையான போது ஒரு டம்ளருக்கு 1/2 டீஸ்பூன் வீதம் போட்டு பருகலாம்.

    First published:

    Tags: Cold, Mint, Tulsi