ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உருளை கிழங்கில் இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செஞ்சுருக்கீங்களா.? டிரை பண்ணுங்க..

உருளை கிழங்கில் இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செஞ்சுருக்கீங்களா.? டிரை பண்ணுங்க..

உருளைக்கிழங்கு பைட்ஸ்

உருளைக்கிழங்கு பைட்ஸ்

Potato Bites | ஈவினிங்க் ஸ்நாக்ஸ் செய்ய இந்த போட்டேடோ பைட்ஸ்- ஐ செஞ்சு பாருங்க... இன்னும் இன்னும் என்று அனைவரும் கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உருளைக்கிழங்கு பைட்ஸ் மாலை நேரங்களில் உண்ணும் சிற்றுண்டிகளில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு - 3

உப்பு - தேவையான அளவு

கான்ஃப்ளார் மாவு - 3 டீஸ்பூன்

சில்லி ஃபிளேக்ஸ் - 3 டீஸ்பூன்

ஆர்கனோ - சிறிது

எண்ணெய் - வறுத்தெடுக்க தேவையான அளவு

செய்முறை

1. முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். 3 கிழங்கு எடுத்துக் கொண்டால் 2 பேர் தாராளமாக சாபிடலாம். அதானால் உங்கள் தேவைக்கு ஏற்ப வேக வைத்துக் கொள்ளவும்.

2. அதன் பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக துருவிக்கொள்ள வேண்டும்.

3. இப்போது அதில் சிறிதளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. அதன் பிறகு கான்ஃப்ளார் மாவை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
 
View this post on Instagram

 

A post shared by irAm (@bismillah_rasoi)5. அது நன்றாக மிக்ஸ் ஆனதும் அதில் சிறிதளவு சில்லி ஃபிளேக்ஸ் மற்றும் ஆர்கனோ சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

6. இப்போது இந்த உருளைக்கிழங்கு நல்லா சப்பாத்தி மாவு போல சாஃப்ட்டான பதத்திற்கு வந்துவிடும்.

7. இந்த மாவை எடுத்து பூரி மாவை போல உருண்டையாக உருட்டி அதன் நடுவில் ஸ்பூனை வைத்து லேசாக அழுத்த வேண்டும். இப்போது அது அழகான டிசைன் போல வந்துவிடும்.

8. அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய்யை ஊற்ற வேண்டும். அது நன்றாக காய்ந்ததும் உருட்டிய உருளைக்கிழங்கை பொரித்து எடுத்தால் போட்டேடோ பைட்ஸ் தயார்.

First published:

Tags: Potato recipes, Snake