Organic Food | ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுங்கள்..!

கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் அளவாக உட்கொண்டால் உடல் எடை குறையும்.

கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் அளவாக உட்கொண்டால் உடல் எடை குறையும்.

  • Share this:
செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் உணவு எப்போதும் ஆரோக்கியமானவை. சுத்தமான காற்று, அடர்த்தியான நிலப்பரப்பு, சிறந்த பண்ணை தொழிலாளர்கள் மற்றும் ஒரு சீரான காலநிலை, இயற்கை நீர்வழிகள், ஆரோக்கியமான மண் நிறைந்த ஒரு சிறந்த பல்லுயிர் சுற்றுச்சூழல் அமைப்பு ஆர்கானிக் வேளாண்மையை ஊக்குவிக்கிறது.

இத்தகைய பகுதியில் விளைவிக்கப்படும் ஆர்கானிக் உணவில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதுகுறித்து அனாஹாட்டா ஆர்கானிக்ஸ் நிறுவனர் ராதிகா ஐயர் கூறிய விவரங்களை இங்கு காண்போம்.,

இயற்கை முறையில் வளர்க்கப்படும் பழங்கள்:

தற்போது முற்றிலும் இயற்கையான முறையில் மற்றும் பூச்சிக்கொல்லி இல்லாத பழங்களை வளர்க்கும் பல பண்ணைகள் உள்ளன. இங்கு கிடைக்கும் பழங்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இல்லை என்பதால் இந்த பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் கூடுதல் சுவையாகவும் இருக்கும்.

Must Read | ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

இயற்கை முறையில் விளைவிக்கும் பண்ணைகள் மகரந்தச் சேர்க்கைக்கு உகந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இங்கு விளையும் பழங்கள் ஆரோக்கியமானது மட்டுமின்றி, உங்கள் சரும அழகையும் பாதுகாக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நட்ஸ் மற்றும் விதைகள்:

நட்ஸ் மற்றும் விதைகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் இவற்றை அளவாக உட்கொண்டால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. விதைகளில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நட்ஸ்களில் ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாமிரம், துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன. இதனால் இவைகள் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இவற்றை தினமும் சாப்பிட்டு வர பளபளப்பான சருமமும் கிடைக்கும்.

இயற்கை முறையில் வளர்க்கப்படும் பெர்ரி:

பெர்ரி வைட்டமின் கே -இன் சிறந்த மூலமாகும். இது ஆந்தோசயனின் என்ற தாவர கலவையாக உள்ளது. இதுதான் பெர்ரிகளுக்கு நீல நிறத்தை வழங்குகிறது. இயற்கை முறையில் வளர்க்கப்படும் பெர்ரி பழங்களை சாப்பிடுவது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் மாரடைப்பை அபாயத்தை தடுக்க செய்கிறது. பெர்ரி பழங்களை இயற்கை முறையில் கொள்முதல் செய்யப்படும்போது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களை உருவாக்கும் சக்தியாக விளங்குகின்றன.

Must Read | மார்பகங்களில் பால் கட்டுவதை (Breast Engorge) தடுப்பது எப்படி? இதிலெல்லாம் கவனம் தேவை!

இயற்கை காய்கறிகள்:

இயற்கை காய்கறிகள் செயற்கை பூச்சிக்கொல்லி இல்லாமல் வயலில் வளர்க்கப்படுவதால், நமக்கு அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நமது குடல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே இயற்கை முறையில் விளையும் காய்கறிகளை அதிகம் வாங்குவதன் மூலம் நாம் அவர்களை ஊக்குவிக்க முடியும். மேலும் சிறிய அளவிலான நிறுவனங்கள் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட காய்கறிகளை சந்தைப்படுத்த முன்வர வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆர்கானிக் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் தினை:

ஆர்கானிக் தானியங்கள் மற்றும் தினை வகைகள் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. மேலும் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. எனவே ஆர்கானிக் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் தினை ஆகியவற்றை தினமும் உட்கொண்டு வந்தால் உடல் பருமன் மற்றும் நாள்பட்ட அழற்சியை குறைக்க உதவும். எனவே, நீங்கள் உங்கள் உணவு பட்டியலை மாற்ற விரும்பினால், ஆர்கானிக் உணவுகளுக்கு மாறுங்கள். யோகா மற்றும் உடற்பயிற்சி நாம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் அவசியம் என்பதால் ஆர்கானிக் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
Published by:Archana R
First published: