டல்கோனா காஃபிக்குப் பின் டிரெண்டாகும் ’டீ பாம்’... உங்களுக்கு இதைப் பற்றி தெரியுமா ..?

டல்கோனா காஃபிக்குப் பின் டிரெண்டாகும் ’டீ பாம்’... உங்களுக்கு இதைப் பற்றி தெரியுமா ..?

டீ பாம்

ஹாட் சாக்லெட் பாம்ஸ் சமீபத்தில் மிகவும் வைரலானது. அதைத் தொடர்ந்தே இந்த டீ பாம்ஸ் பிரபலமாகி வருகின்றன.

 • Share this:
  கொரோனா லாக்டவுனில் பல வகையான உணவுகள் டிரெண்டானது. அதில் டல்கோனா காஃபியும் மிகப் பிரபலம். அதுதான் கடைசி உணவு டிரெண்டாகவும் இருந்தது. தற்போது அதைத் தொடர்ந்து டீ பாம் மிகவும் பிரபலமாகி வருகிறது.

  ஹாட் சாக்லெட் பாம்ஸ் சமீபத்தில் மிகவும் வைரலானது. அதைத் தொடர்ந்தே இந்த டீ பாம்ஸ் பிரபலமாகி வருகின்றன.

  இந்த பாம் சர்க்கரை, கார்ன் சிரப் மற்றும் இன்னும் சில பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இந்த பாலை ஒரு டீ கப்பில் வைத்து சூடான தண்ணீர் ஊற்றினால் அவை அப்படியே உடைந்து சுருங்கிவிடும். பின் அதில் இருக்கும் டீ பை மட்டும் எஞ்சியிருக்கும். அதை முக்கி எடுத்துவிட்டு டீயைக் குடிக்கலாம்.   
  View this post on Instagram

   

  A post shared by Melisa (@melssweetness)


  இதில் சாதாரண கிரீன் டீ, எலுமிச்சை டீதான் என்றாலும் அது பந்துபோல் இருப்பதும் , சுடு தண்ணீர் ஊற்றியதும் சுருங்கி டீ பையாக மாறுவதும் பார்த்தவுடன் வெகுவாக ஈர்க்கிறது. இதனாலேயே பலரும் அதை முயற்சி செய்து வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த டிரெண்ட் இன்னும் இதியாவில் வரவில்லை. வெளிநாடுகளில் பிரபலமாகி வருகிறது.

   

   
  Published by:Sivaranjani E
  First published: