இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு சகோதாரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் நாகலாந்தும் ஒன்று. நாகாலாந்து அதன் கலாச்சார, இன மற்றும் மொழியியல் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. பல உள்ளூர் பழங்குடியினரை உள்ளடக்கிய வளமான சமூக-கலாச்சார பாரம்பரியத்தை மாநிலம் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்துவமான இன மரபுகளைக் கொண்டுள்ளது.
வளமான இந்த வடகிழக்கு மாநிலத்தில் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், காடுகள், அற்புதமான பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என பார்க்கும் திசையெல்லாம் இயற்கை வளம் நம்மை பிரம்மிக்க வைப்பதை போல், அதன் சொந்த தனித்துவமான உணவு வகைகளையும் கொண்டுள்ளது. அவை சுவையில் நிறைந்துள்ளன மற்றும் பல்வேறு பழங்குடியின குழுக்களின் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன.
நாகா மக்களின் உணவுக் கலாச்சாரம் என்பது, பழக்குடியின மக்களுக்கு உள்ளூரில் இருந்து கிடைக்கு கூடிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், இறைச்சி, அரிசி, மூலிகைகள், பால், புளிக்க வைக்கப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. உலகில் நீங்கள் எந்த மூலையில் சாப்பிட்டிருந்தாலும், நாகா மக்களின் உணவும், அதன் ருசியும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். எனவே ஒருமுறையாவது நாகா மக்களின் உணவு வகைகளை ருசி பார்ப்பது நல்லது.
நாகா உணவு வகைகள் மற்றும் ஒரு சாதாரண குடிமகன் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, நீங்கள் கோஹிமாவில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட்டைப் பார்வையிட்டாலே போதும். நாகா பழங்குடியினரின் கவர்ச்சியான உணவுப் பொருட்களான மெஃபி (சுழலும் ஹார்னெட் கிரப்ஸ்), தவளைகள், பட்டுப்புழுக்கள், நத்தைகள், நண்டுகள், உலர்ந்த மீன் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சந்தைகளில் பரவலாக காண முடியும். புளிக்கவைக்கப்பட்ட மூங்கில் தளிர்கள், பையரி கிங் மிளகாய், விதவிதமான காய்கறிகள், வகை வகையான கீரைகள், வாசனை மிகுந்த மசாலாப் பொருட்கள் ஆகியவை நாகா மக்களுக்கும் அவர்களது உணவு பழக்க வழகத்திற்கும் இடையிலான தொடர்பினை உங்களுக்கு உணர்த்தும்.
பார்லி அல்லது கினோவா... எடை குறைப்புக்கு எது சிறந்தது..? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்
நாகா மக்களின் வழக்கமான உணவில் அரிசி, பன்றி இறைச்சி அல்லது வேறொரு ஏதேனும் ஒருவகை இறைச்சி, வேகவைத்த அல்லது பச்சைக் காய்கறிகள், பலவிதமான சட்னி வகைகள், உறுகாய்கள் போன்றவை இருக்கும்.
ஆக்சோன், புளிக்கவைக்கப்பட்ட சோயாபீன் பேஸ்ட், நாகா உணவு வகைகளில் ஒரு முக்கிய பகுதியாகும். இவை அகுனி என்றும் அழைக்கப்படும் ஆக்ஸோன், ஊறுகாய், சட்னி, கறி மற்றும் அசைவ உணவுகள் போன்ற பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
பன்றி இறைச்சி, மீன், கோழி அல்லது மாட்டிறைச்சி உணவுகள் தயாரிப்பதில் ஆக்சோன் பயன்படுத்தப்படுகிறது. பல வித்தியாசமான சுவைகளின் கலவையாக இருப்பதால் இதனை அசைவ உணவில் நாகா மக்கள் அவசியம் பயன்படுத்துகின்றனர். நாகா உணவு வகைகளுக்கான சைடு டிஸ்ஸாக அரிசி பீர், சுத்தோ, புளிக்கவைக்கப்பட்ட மீன் சட்னி ஆகியவை வழங்கப்படுகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.