முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் குழந்தையின்மை உண்டாகுமா..?

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் குழந்தையின்மை உண்டாகுமா..?

சர்க்கரை : காஃபி தூளில் தேன் மற்றும் சர்க்கரை கலந்து முகத்தில் ஸ்கிரப் போல் தேய்க இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பளிச்சிடும். அழுக்கு மற்றும் இறந்த செல்களும் வெளியேறும்.

சர்க்கரை : காஃபி தூளில் தேன் மற்றும் சர்க்கரை கலந்து முகத்தில் ஸ்கிரப் போல் தேய்க இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பளிச்சிடும். அழுக்கு மற்றும் இறந்த செல்களும் வெளியேறும்.

சர்க்கரை அளவைக் குறைத்துக் கொண்டாலே இந்த பிரச்னை சரியாகிவிடும் .

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இனிப்பு விரும்பிகளுக்கு இது கசப்பான செய்தியாக இருக்கலாம். சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் அதிக சர்க்கரை சாப்பிட்டால் ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைவாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளது.

PLOS Biology என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விந்தணுக்களின் தரம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாலும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் விந்தணுக்களில் இருக்கும் RNA fragments என்பது மரபணு தொடர்புடையது. இது அளவுக்கு அதிகமான சர்க்கரையை உட்கொண்டால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இதற்காக 15 ஆண்கள் அதுவும் புகை பழக்கம் இல்லாத ஆண்களை தேர்வு செய்து ஆய்வுக்கு உட்படுத்திக் கண்டறிந்துள்ளது. அவர்களுக்கு அதிக சர்க்கரைக் கொண்ட குளிர்பானங்களை தினமும் 3.5 லிட்டர்கள் வரைக் கொடுத்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து குளிர்பானங்களை குடித்து வந்ததால் அவர்களின் விந்தணுக்களின் இயக்கம் குறைந்துள்ளது. இந்த விந்தணு இயக்கம்தான் அதன் தரத்தையும் தீர்மானிப்பது. எனவே அதுவே சரியாக செயல்படாமல் போவதால் அதன் தரமும் குறைவாகவே இருக்கும் என கண்டறிந்துள்ளது.

மேலும் இது தீர்க்க முடியாத விஷயமல்ல. தம்பதிகள் உடனே உணவு முறையை மாற்றி சர்க்கரை அளவைக் குறைத்துக் கொண்டாலே இந்த பிரச்னை சரியாகிவிடும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Sugar