ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தக்காளி சாப்பிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராதா..? ஆய்வு தரும் விளக்கம்...

தக்காளி சாப்பிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராதா..? ஆய்வு தரும் விளக்கம்...

தக்காளி

தக்காளி

தக்காளியை உண்பதால் கட் மைக்ரோபயோம் (gut microbiome) எனப்படும் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மைகள் கிடைக்கிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பச்சை காய்கறிகளை உண்பதன் முக்கியத்துவத்தை பற்றி நீண்ட காலமாக பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றியும், என்னென்ன விதமான காய்கறிகளை உன்ன வேண்டும் என்பதை பற்றியும் பலரும் விதவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனனர். அந்த வகையில் தற்போது தக்காளியை வைத்து ஒரு புதிய ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தக்காளி, உணவு பொருட்களில் அன்றாட பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முக்கியமான ஒன்றாகும். அதிகமாக நீர்ச்சத்து உள்ள இந்த தக்காளியில் உண்பதால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன் உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கிறது.

ஆனால் இவை அனைத்தையும் விட முக்கியமான ஒரு நன்மையை தக்காளியை உண்பதால் பெற முடியும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். அதாவது தக்காளி உண்பதால் வயிற்றில் நமக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றிற்கு அதிக நன்மை கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓஹியோ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளருமான ஜெசிக்கா கோப்பர் ஸ்டோன் என்பவர் கூறுகையில், “தக்காளியை உண்பதால் கட் மைக்ரோபயோம் (gut microbiome) எனப்படும் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மைகள் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.

Also Read : நீண்ட நாட்களான வாட்டர் கேன் தண்ணீரை குடிக்கலாமா..? அதனால் உடல் நல பாதிப்புகள் வருமா..?

20 பன்றிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அதில் பாதி பன்றிகளுக்கு எப்போதும் அளிக்கப்படும் சாதாரணமான தீவனம் அளிக்கப்பட்டது. மீதமுள்ள பன்றிகளுக்கு எப்போதும் அளிக்கப்படும் தீவனத்துடன் 10% தக்காளியை கொண்டு செய்யப்பட்ட பிரீஸ்-டிரைட் பவுடர் என்ற கூடுதல் உணவுடன் சேர்க்த்து அளிக்கப்பட்டது. மேலும் நார்ச்சத்து, கொழுப்பு, சர்க்கரை மற்றும் புரதச்சத்துக்கள் அனைத்தும் சரியான விகிதத்தில் இருக்குமாறு கலந்து உணவு வழங்கப்பட்டது. அதில் தக்காளி சேர்க்கப்பட்ட தீவனத்தை உட்கொண்ட பன்றிகளின் பயிற்சியில் வளரும் நுண்ணுயிர்களின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

பன்றிகளை வைத்து இந்த ஆராய்ச்சியை நடத்தியதில் மற்றும் ஒரு முக்கிய காரணமும் உண்டு. பன்றிகளின் செரிமான உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதனைப் போன்று இருக்கும். அதனால் தான் பன்றிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முக்கியமாக பாலூட்டுகளின் வயிற்றில் காணப்படும் நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்கள் வளர்ச்சி அதிகமாக இருந்ததாகவும் அவைகளின் செயல் திறன் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் எவ்வாறு தக்காளியானது வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களுக்கு நன்மையை கொடுக்கிறது என்பது இன்று வரை தெரியவில்லை. ஆனால் ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தும் பாசிட்டிவாக வந்துள்ளன.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தரவுகளை வைத்து பார்க்கும் போது, இதன்பிறகு மனிதர்களை வைத்து இந்த ஆராய்ச்சியை நீண்ட காலத்திற்கு செய்து இன்னும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Gut Health, Tomato