Home /News /lifestyle /

தக்காளி பாயாசம் செஞ்சதே இல்லையா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க... ரெசிபி இதோ

தக்காளி பாயாசம் செஞ்சதே இல்லையா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க... ரெசிபி இதோ

தக்காளியில் பாயாசம் செய்து பாருங்கள்.. அப்புறம் விடவே மாட்டீங்க... ரெம்ப சுவையாக இருக்கும்...

தக்காளியில் பாயாசம் செய்து பாருங்கள்.. அப்புறம் விடவே மாட்டீங்க... ரெம்ப சுவையாக இருக்கும்...

தக்காளியில் பாயாசம் செய்து பாருங்கள்.. அப்புறம் விடவே மாட்டீங்க... ரெம்ப சுவையாக இருக்கும்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. சாதரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது. தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன. அத்தகைய தக்காளியில் பாயாசம் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

பழுத்த தக்காளி – 4,

துருவிய வெல்லம் – 1/4 கப்,

நெய் – 2 டேபிள் ஸ்பூன்,

திக்கான தேங்காய்ப் பால் – 1 கப்,

நறுக்கிய முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்,

பல்லு பல்லாக கீறிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்,

ஏலப்பொடி – 1 டீஸ்பூன்.

காட்சி படம்


செய்முறை

முதலில் முந்திரி, கீறிய தேங்காயை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு, தேங்காய் ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வறுத்த முந்திரி, வறுத்த தேங்காய், ஏலப்பொடி தூவி பரிமாறவும். இப்போது தக்காளி பாயாசம் ரெடி

குறிப்பு:

இதே முறையில் வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தையும் சேர்த்து செய்யலாம்.

மேலும் படிக்க... டோஃபு பன்னீர் உடலுக்கு நல்லதா?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Sweet recipes, Tomato

அடுத்த செய்தி