முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தக்காளி மசாலா பூரி ரெசிபி...

தக்காளி மசாலா பூரி ரெசிபி...

சுவையான தக்காளி பூரி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

சுவையான தக்காளி பூரி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

சுவையான தக்காளி பூரி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Last Updated :

பூரியை எப்பவுமே ஒரே மாதிரியாக செய்து கொடுப்பதினால் வீட்டில் உள்ளவர்கள் விருப்பம் இன்றி உண்ணுவார்கள்... இதில் சில மசாலாக்களை சேர்த்து அத்துடன் தக்காளியையும் சேர்த்து பூரி மாவுவை பிசைந்து செய்து கொடுத்து பாருங்கள்...

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

ரவை – 1/2 கப்

தக்காளி – 4

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – பொரிப்பதற்கு

தக்காளி

செய்முறை

தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு தோலுரித்து, மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம்மசாலா, சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறிய பூரிகளாக திரட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். சுவையான தக்காளி பூரி ரெடி.. தேங்காய் சட்டினியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

மேலும் படிக்க...  காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

 சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

top videos

    கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி...

    First published:

    Tags: Food