• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பாட்டி ஸ்டைல் தக்காளி குழம்பு செய்ய ரெசிபி...

பாட்டி ஸ்டைல் தக்காளி குழம்பு செய்ய ரெசிபி...

தக்காளி குழம்பு

தக்காளி குழம்பு

தக்காளியில் செய்யும் உணவுகளுக்கே எப்போதும் தனி ருசிதான். அந்த வகையில் பாட்டி ஸ்டைலில் தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Share this:
தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த தக்காளி குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

தேவையானவை:

நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2

கீறிய பச்சை மிளகாய் - 1,

பூண்டு - 2 பல்,

பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு,

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

தனியாத்தூள் - 2 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்),

கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது அல்லது பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.இப்போது தக்காளி குழம்பு ரெடி.

மேலும் படிக்க... Health Tips: நீங்கள் மீண்டும் வறுத்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்களா? அதற்கு முன் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: