சாண்ட்விட்ச், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என சாட் உணவுகளுக்கு நண்பனே டொமேட்டோ கெட்ச்அப்தான். சிலர் அதை சும்மாவே தொட்டு சாப்பிடுவார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக டொமேட்டோ கெட்ச்அப் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா..?
பொதுவாகவே தக்காளிக்கு கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் உண்டு. ஆனால் அதை இப்படி திடமான பேஸ்ட் போல் செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கூடுதல் நல்லது என பிபிசியின் சைன்ஸ் ஃபோக்கஸ் இதழ் கூறுகிறது.
அதாவது தக்காளியில் இருக்கும் சிவப்பு நிறமானது ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் லைகோபீன் நிறைந்தது. அது உடல் செல்களை புதுப்பித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய பாதிப்புகள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும்.
அந்த வகையில் இப்படி கெட்ச்அப்பாக சாப்பிடும்போது, அதில் உள்ள லைகோபீன் அதிகரிக்கிறது. அடர் சிவப்பு வகைகளும் அதிகம் உள்ளன. சில ஆய்வுகளிலும் கூடுதல் கெட்ச்அப் சாப்பிட்டவர்களுக்கு சில வாரங்களில் கொழுப்பு அளவு குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இதை கெட்ச்அப்- ஆகவும் சாப்பிடலாம். அப்படியே ஃபிரெஷாக சாப்பிட்டாலும் உடல் நலத்து நன்மைகளே அதிகம் என்கின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.