உங்க சருமம் ஜொலிக்கணுமா ? அப்ப இந்த வைட்டமின் A நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்

உங்க சருமம் ஜொலிக்கணுமா ? அப்ப இந்த வைட்டமின் A நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்

வைட்டமின் ஏ

இயற்கையாக நமது சருமம் ஜொலிக்க வேண்டும் என்றால் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை நாம் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • Share this:
வைட்டமின் A சத்தானது புதிய தோல் உயிரணு உற்பத்தி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரெட்டினாலைக் கொண்டுள்ளது.  இது பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது, மேலும் கொலாஜனை உடைக்கும் பிரீ ராடிக்கல்ஸ்களுடன் போராடக்கூடியது, அனைத்தையும் விட, வைட்டமின் A சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. வைட்டமின் A நிறைந்த உணவுகள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்குவதற்கு மட்டுமல்லாமல், கண்பார்வையை மேம்படுத்தவும், நரம்பியல் செயல்பாடுகளை பராமரிக்கவும் உதவுகின்றது. 

வைட்டமின் A நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான சருமத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் சருமம் ஜொலிக்கும். இத்தகைய வைட்டமினை இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும். கீழ்காணும் உள்ளடக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் நிச்சயம் உங்களை ஆரோக்கியமான சருமத்தை பெறவைக்கும்.

 

சருமத்திற்கு பலன் தரும் வைட்டமின் A நிறைந்த உணவுகள்:

கேரட் :

கேரட் என்பது இந்திய மற்றும் சர்வதேச உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான காய்கறி ஆகும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு கப் கேரட்டில் உங்கள் தினசரி வைட்டமின் A தேவையில் 334 சதவீதத்தை வழங்கக்கூடும் என்கின்றனர். மேலும் கேரட் ஒரு ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்ற பீட்டா கரோட்டின் வைட்டமின் A சத்தின் மூலமாகும். கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டும் குடிக்கலாம். 100 கிராம் பேரட்டில் 836mcg வைட்டமின் A நிறைந்துள்ளது. எனவே முடிந்த அளவில், இதனை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

பப்பாளிப் பழம்:

பப்பாளி பழத்தில் அதிக அளவு வைட்டமின் A, வைட்டமின் C, போல்டேஸ், நார்சத்து, பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.  பொதுவாக பப்பாளி அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று தெரியும். ஆகவே தொடர்ந்து பப்பாளியை சாப்பிடுங்கள்.

தக்காளி:

நீங்கள் தக்காளியை சாப்பிடுகிறீர்கள், ஆனால் அதை எப்போதாவது உங்கள் முகத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்களா? பயன்படுத்தாவிட்டால், இன்று முதல் அதை முகத்தில் பயன்படுத்தத் தொடங்குங்கள். வாரம் இருமுறை  தக்காளி சூஸ் குடித்துவர உடலில் செல்கள் எல்லாம் புத்துணர்ச்சி அடையும். சருமத்தில் குளோவானது கிடைக்கும். வாழைப்பழத்துடன் தக்காளிச்சாறு கலந்து முகம் கை, கால்களில்   தடவும் பொழுது முகம் கை, கால்கள் எல்லா பெடிகியூர், மெனிகியூர் செய்தது போல் இருக்கும்.  தக்காளி பருக்களைப் போக்கும், எண்ணெய்  பசை சருமத்தை சீராக்கும். உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும். 

தக்காளியைத்தான் தினமும் உணவில் சேர்த்து வருகிறோமே என்கிறீர்களா? ஆனாலும் வேறு வகையில் தக்காளியை அதிகம் சேர்த்துகொள்ளுங்கள். தக்காளியில் இருக்கும் பீட்டா கரோட்டின், லுடீன், லைகோபின் போன்றவை சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். மேலும் முகத்தில் வயது முதிர்வை தடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சருமம் சுருக்கமாவதை தடுக்கும் தக்காளி வைட்டமின் A மற்றும் C நிறைந்தது. சருமத்தை பாதுகாக்க வேண்டுமெனில் உணவில் சேர்ப்பதோடு தக்காளியை அதிக அளவில் சேர்த்துவரலாம்.

முட்டை:

 அனைவருக்கும் முட்டையில் புரோட்டீன் மட்டும் தான் அதிகம் உள்ளது என்று தெரியும். ஆனால் இதில் வைட்டமின் A சத்தும் அதிகம் உள்ளது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். வைட்டமின் D தவிர, முட்டையின் மஞ்சள் கரு சருமத்திற்கு முக்கியமானது. இது நம் சருமத்திற்கு சிறந்தது. நல்ல ஆரோக்கியத்திற்கும் அழகான சருமத்திற்கும் முட்டைகளை மிதமாக சாப்பிடுங்கள்.

கீரை: 

கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமைத் தோற்றத்துடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்துக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும் ஆன்டி ஆக்சிடன்ட்களான லைகோபீன் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

புராக்கோலி:

பச்சை இலைக் காய்கறிகளில், புராக்கோலியில் அதிக அளவில் லைகோபீன் உள்ளது. எனவே இந்தக் காய்கறியை தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட வழிகோலும். இதில் வைட்டமின் A மிகுந்து காணப்படுவதால் இது சருமத்திற்கு மிகவும் நல்லது.

வால்நட்:

அதிக ஆரோக்கியம் தரும் உணவு பட்டியலில் வால்நட் முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றை தொடர்ந்து எடுக்கும் போது மென்மையான சருமம், பொலிவான கூந்தல், உறுதியான எலும்புகள் என அனைத்து நன்மைகளையும் கொடுக்க வல்லது. நல்ல கொழுப்பு அதிக புரதம் ஏ எல் ஏ என்னும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த வால்நட் எப்போதுமே உங்களுக்கு ஆரோக் கியத்தை மட்டுமே அளிக்கவல்லது. உலர் பருப்புகள் அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதங்களை கொண்டவை என்பதால் இவை எப்போதும் உங்களை அழகாக வைத்திருக்கும். 

எல்லோருக்குமே தங்கள் இளமை அழகைத் தக்கவைத்துக்கொள்ள ஆசை. அதற்காக என்னென்னவோ செய்கிறார்கள். யார், யாரோ கூறும் யோசனைகளைப் பின்பற்றுகிறார்கள், பலவித அழகுசாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், அவ்வப்போது அழகு நிலையத்துக்கும் சென்று வருகிறார்கள். ஆனால் கன்னாபின்னாவென்று அழகு முயற்சிகளை மேற்கொண்டால் செல்கள் பாதிக்கப்பட்டு விரைவில் தோல் சுருங்கிவிடும். மாறாக, மேற்சொன்ன சரியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இளமை எழிலைக் காக்கலாம்.

 

 
Published by:Tamilmalar Natarajan
First published: