முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு பிடித்த திரட்டுப் பால் செஞ்சுருக்கீங்களா.? ட்ரை பண்ணிபாருங்க..!

குழந்தைகளுக்கு பிடித்த திரட்டுப் பால் செஞ்சுருக்கீங்களா.? ட்ரை பண்ணிபாருங்க..!

திரட்டுப்பால்

திரட்டுப்பால்

thirattupal | மிகவும் சுலபமாகவும்,சீகிரமாகவும் செய்யக்கூடிய ரெசிபிதான் இந்த திரட்டுப்பால். இது குழந்தைகள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொதுவாக பாலில் ஸ்வீட் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும். அதிலும் தித்திப்பான திரட்டுப் பால் செய்தால், சொல்லவா வேண்டும். இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். திரட்டு பால் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

பால் – ஒரு லிட்டர்

வெள்ளம் – 300 கிராம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

ஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன்

நெய் – அரை ஸ்பூன்

முந்திரிபருப்பு – 10

செய்முறை:

1. ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும்.

2. அதனை அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்.

3. பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு நன்றாக கலக்கவும். சிம்மில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.

4. இப்போது திரட்டுப்பால் ஒன்றாக சேர்ந்து வரும். அடுத்து நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும்.

5.இப்போது தித்திப்பான திரட்டுப்பால் ரெடி.

First published:

Tags: Milk, Sweet recipes