Home /News /lifestyle /

எலுமிச்சை பழங்களை இப்படி போட்டு வைத்தால் 6 மாதங்களுக்கு கெட்டுப்போகாது..!

எலுமிச்சை பழங்களை இப்படி போட்டு வைத்தால் 6 மாதங்களுக்கு கெட்டுப்போகாது..!

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழத்தை வாங்கி வந்ததும் முதலில் நன்கு கழுவிக்கொள்ளுங்கள். பின் அவற்றில் புள்ளிகள் இருப்பின் அவற்றை சேமித்து வைக்காமல் உடனே பயன்படுத்திவிடுவது நல்லது என்கிறார்.

அன்றாடம் பயன்படுத்தக் கூடிய சமையல் பொருட்களை கொஞ்சம் அதிகமாக வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கும் உண்டு. அப்படி சேமித்து வைப்பதால் நினைத்த நேரத்தில் சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வது மட்டுமன்றி நேரமும் மிச்சமாகிறது. அந்த வகையில் காய்கறிகளின் பட்டியலில் எலுமிச்சையும் எப்போதும் சேமித்து வைக்கப்படும் ஒன்று. ஆனால் அவை சில நாட்களிலேயே பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும். இதை எப்படி சரி செய்வது..? செஃப் ஷஷான் காலிஷ் பகிர்ந்த இந்த வீடியோ டிப்ஸை கவனியுங்கள்...

எலுமிச்சை பழத்தை வாங்கி வந்ததும் முதலில் நன்கு கழுவிக்கொள்ளுங்கள். பின் அவற்றில் புள்ளிகள் இருப்பின் அவற்றை சேமித்து வைக்காமல் உடனே பயன்படுத்திவிடுவது நல்லது என்கிறார். இல்லையெனில் வாங்கும்போது புள்ளிகள் இல்லாத பழமாக வாங்குங்கள்.

பழங்களை கழுவி சுத்தம் செய்த பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளை வினிகர் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதில் எலுமிச்சை பழங்களை போட்டு 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள்.



 




View this post on Instagram





 

A post shared by The Foodie (@timesnowfoodie)






ஊறிய பின் அவற்றை தண்ணீர் இன்றி காய வையுங்கள். இல்லையெனில் டவலில் துடைத்து ஈரத்தை எடுத்துவிடுங்கள். பின் அவற்றின் மீது எண்ணெய் தடவுங்கள். பின் ஒரு டப்பாவில் அடைத்து ஃபிரீசரில் வைத்துவிடுங்கள். இந்த எலுமிச்சை பழங்களை இப்படி சேமிப்பதால் 6 மாதம் வரை தாங்கும்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Lemon

அடுத்த செய்தி