மீந்து போன சாதத்தில் பஞ்சு போன்ற இடியாப்பமா..? பத்தே நிமிடத்தில் செய்ய ரெசிபி...
மீந்து போன சாதத்தில் பஞ்சு போன்ற இடியாப்பமா..? பத்தே நிமிடத்தில் செய்ய ரெசிபி...
இடியாப்பம்
குழந்தைகள் திடீரென ஆப்பம் சாப்பிட வேண்டும் என்று கேட்பார்கள். அந்த சமயத்தில் மாவு போடவில்லையே என வருந்த வேண்டாம். காலையில் வடித்த சாதம் இருந்தால் இரவு இடியாப்பம் சுட்டு கொடுத்துவிடுங்கள்.
இடியாப்பம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சில நேரங்கள் குழந்தைகள் திடீரென ஆப்பம் சாப்பிட வேண்டும் என்று கேட்பார்கள். அந்த சமயத்தில் மாவு போடவில்லையே என வருந்த வேண்டாம். காலையில் வடித்த சாதம் இருந்தால் இரவு இடியாப்பம் சுட்டு கொடுத்துவிடுங்கள். ஆச்சரியமாக இருக்க... ரெசிபியை பாருங்க...
தேவையான பொருட்கள் :
சாதம் - 1கப்
பச்சரிசி மாவு - 1 கப்
உப்பு - தே.அ
செய்முறை :
சாதத்தை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். சாதம் தடையமே இருக்கக் கூடாது. அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
அரைத்த சாதத்தை வழித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
இப்போது அதில் அரிசி மாவை சேர்த்து நன்கு கைகளால் பிசைந்துகொள்ளுங்கள். மாவு சப்பாத்தி மாவு போன்ற பதத்தில் இருக்க வேண்டும். அதற்காக அதிக கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
மாவை நன்கு பிசைந்ததும் தேவையான அளவு எடுத்து இடியாப்ப அச்சில் போட்டுக்கொள்ளுங்கள். பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி எப்போதும்போல் பிழிந்துகொள்ளுங்கள்.
பின் இட்லி குண்டானில் வைத்து 10 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால் பஞ்சு போன்ற இடியாப்பம் தயார்.
இதற்கு குருமா, தேங்காய்ப்பால் பொருத்தமான சைட்டிஷ்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.