ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெண்டைக்காயை சரியான பதத்தில் எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா..? இந்த டிப்ஸை கவனியுங்கள்...

வெண்டைக்காயை சரியான பதத்தில் எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா..? இந்த டிப்ஸை கவனியுங்கள்...

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட்ஸ் குறைவாக உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே1 அதிகம் உள்ளது. மற்ற காய்களுடன் ஒப்பிடும் போது புரதம் குறைவாக கொண்டது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த வெண்டைக்காய் அதனுள் தடிமனான ஜெல் போன்ற பொருளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் கோடை வெயில் எந்த நேரத்திலும் மீண்டும் வெளுக்க துவங்கும் என்பதால் எளிதில் ஜீரணமாக கூடிய கோடைகால உணவுகளை இப்போதும் கடைப்பிடிப்பதில் தவறில்லை. நம் நாட்டில் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு கிடைக்கும் காய்களில் முக்கியமானது வெண்டைக்காய்.

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட்ஸ் குறைவாக உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே1 அதிகம் உள்ளது. மற்ற காய்களுடன் ஒப்பிடும் போது புரதம் குறைவாக கொண்டது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த வெண்டைக்காய் அதனுள் தடிமனான ஜெல் போன்ற பொருளைக் கொண்டுள்ளது. இதிலிருக்கும் பிசுபிசுப்பான பொருள் வெண்டைக்காயை கேட் செய்வதையும், சமைப்பதையும் சற்று கடினமாக்குகிறது. ஒரு சிலருக்கு வெண்டைக்காயை சாம்பாரில் போட்டால் பிடிக்காது ஆனால் பொரியல் செய்தல் சாப்பிடுவார்கள். இதற்கு காரணமும் அதன் பிசுபிசுப்பு தன்மை தான்.

வெண்டைக்காயை சமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள் இங்கே...

எப்படி செலக்ட் செய்ய வேண்டும்.?

வெண்டை ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும் மே முதல் செப்டம்பர் வரை மிகுதியாக வளரும் மற்றும் கிடைக்கும். வெண்டைக்காயை வாங்கும் போது சிறியதாகவும், முத்தலாக இல்லாமல் மிருதுவாகவும், நடுவில் இருந்து உடைய கூடியதாகவும் இருப்பதை தேர்வு செய்ய வேண்டும். பழுப்பு நிற புள்ளிகள் அல்லது கறைகள் உள்ள காயை எடுக்காமல் தவிர்க்கவும்.

வெண்டைக்காயை எப்படி சேமிப்பது..?

நீங்கள் வெண்டைக்காயை வாங்கிய உடன் அவற்றை ஒரு பேப்பர் அல்லது ஜிப் பவுச்சில் வைத்து போர்த்தி ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதை 3-4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம். நறுக்கிய வெண்டைக்காய்களை ஸ்டோர் செய்ய விரும்பினால், அதற்கு ஜிப் பவுச்சை பயன்படுத்தி கொள்ளலாம்.

வெண்டைக்காயை நறுக்கும் தந்திரம்:

வெண்டைக்காயை சமைப்பதற்கு முன் கழுவி வெட்டினால் அது குழையும். ஏனெனில் தண்ணீர் அதன் குழையும் தன்மையை அதிகரிக்கிறது. எனவே வெண்டையை சமைக்கும் முன் கழுவ வேண்டாம். வெண்டைக்காயை கழுவும் போது அதை அறை வெப்பநிலையில் வைத்து நறுக்கத் தொடங்குங்கள். மெல்லிய துண்டுகளாக வெட்டுவதை விட பெரிய துண்டுகளாக வெண்டைக்காய்களை வெட்டுவது எப்போதும் சிறந்தது.

சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறும் 5 காய்கறிகள்... வாரம் ஒன்று சாப்பிடுங்கள்...

குழையும் தன்மை குறைக்க..

வெண்டையின் குழையும் தன்மையை குறைக்க அதை உறைய வைத்து, உறைந்திருக்கும் போதே அதை வெட்டலாம். அல்லது சமைப்பதற்கு முன் அரை மணி நேரம் வினிகரில் ஊறவைப்பது வெண்டைக்காயின் குழையும் தன்மையை குறைப்பதற்கான மற்றொரு வழி. சமைப்பதற்கு முன், வெண்டையை கழுவி உலர வைக்கவும்.

சரியான சமையல் முறை:

உண்மையில் வெண்டைக்காய்களை சமைப்பது எளிதல்ல. ஏனெனில் அது பிசுபிசுப்பாக மற்றும் குழைவாக மாறும். எனவே அதிக வெப்பத்தில் இதை சமைக்க பரிந்துரைக்கப்படுகிறது. வெண்டையை சமைக்க வறுத்தல் மற்றும் வதக்குதல் சிறந்த வழிகள். ஏனெனில் இந்த முறைகள் வெண்டைக்குள் இருக்கும் பிசுபிசுப்பை குறைக்க உதவுகிறது.

இறுதியில் உப்பு...

ஒரு காய்கறியில் உப்பு மாய்ஸ்ரைஸரை உற்பத்தி செய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எனவே சமையல் செயல்முறையின் முடிவில், கிட்டத்தட்ட முழுவதுமாக சமைக்கப்படும் போது வெண்டைகாய் ரெசிபில் உப்பு சேர்ப்பது எப்போதும் நல்லது.

First published:

Tags: Cooking tips, Ladies finger