Home /News /lifestyle /

சாஃப்ட் சப்பாத்தி செய்ய சில டிப்ஸ்...

சாஃப்ட் சப்பாத்தி செய்ய சில டிப்ஸ்...

சப்பாத்தி

சப்பாத்தி

Soft Chapathi | சாஃப்ட்  சப்பாத்தி செய்ய கடையிலிருந்து வாங்கும் ஆட்டா மாவாக இருந்தாலும் சரி, நீங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் கோதுமையை மாவாக இருந்தாலும் சரி, அந்த மாவில் இத ட்ரை பண்ணி பாருங்க... கண்டிப்பாக சூப்பராக வரும்...

மேலும் படிக்கவும் ...
நிறைய பேருக்கு சப்பாத்தி செய்ய தெரியும். ஆனால், சப்பாத்தி உப்பி வராது. சாஃப்ட்  இருக்காது. சப்பாத்தி என்றாலே லேயர் லேயராக வர வேண்டும். அதாவது சப்பாத்தி ஊப்பும் போது கீழே ஒரு லேயர், மேலே ஒரு லேயர் கட்டாயம் இருக்க வேண்டும். இப்படி ஒரு சூப்பர் சாஃப்ட்  சப்பாத்தியை உங்கள் வீட்டிலும் செய்யலாம். இதோ அதற்கான சில டிப்ஸ்...

1. முதலில் தேவையான அளவிற்கு கோதுமை மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

2. இந்த மாவுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதனால் சப்பாத்தி சுடும் பொழுது ஆங்காங்கே பிரவுன் நிறத்துடன் பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் நன்றாக வெந்து வரும்.

3.மாவு பிசையும் போது கவனமாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவு பிசைந்த பிறகு அவற்றின் மீது எண்ணெய் ஊற்றி தடவிக் கொள்ள வேண்டும்.

4. இப்போது பிசைந்த மாவை அப்படியே விட்டு ஒரு ஈரத் துணியில் காற்று புகாதவாறு மூடி வைத்துக்கொள்ளவும்.

5. குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து அதன் மீது கொஞ்சமாக கோதுமை மாவை தூவி உருண்டைகள் பிடித்து கொள்ள வேண்டும்.

6. பிறகு அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக வைத்து மாவை வட்டமாக தேய்த்து கல்லில் சுட்டு எடுத்தால் நீங்கள் எதிர்பார்த்த சாஃப்டான மற்றும் வாயில் போட்டதும் கரையும் சப்பாத்தி தயாராக இருக்கும்.

Also Read... சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chapathi

அடுத்த செய்தி