பில்டர் காபியை தயார் செய்வதில் நம்மில் சிலர் சிரமப்படுகிறோம். இதற்கு காரணம் டிகாஷன் மற்றும் பால் மிக்ஸ் செய்யும் விகிதம் தான். இன்றைய பதிவில் சுவையான பில்டர் காபியை எப்படி போடுவது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...
தேவையான பொருள்கள்
பால் - 1/2 லிட்டர்
காப்பித்தூள் - 4 மேஜைக்கரண்டி
காபி பில்டர்
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை
பில்டரின் மேல் பாகத்தில் 1/2 மேஜைக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 மேஜைக்கரண்டி காப்பித்தூளை போட்டு நன்றாக அமுக்கிவிடவும். ஒரு கப் ( 200 மில்லி ) தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து காப்பித்தூளின் மேல் மெதுவாக ஊற்றவும். 15 நிமிடங்களில் பில்டரின் கீழ் பாகத்தில் டிகாஷன் இறங்கி விடும். பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். 150 மில்லி பால், 25 மில்லி டிகாஷன் என்ற அளவில் கலந்து தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நுரை வர ஆற்றி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
1. இரண்டு வகையான பில்டர் காப்பித்தூள்களை வாங்கி ஒன்றாக கலந்து ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இதை வைத்து செய்தால் காபி நல்ல சுவையாக இருக்கும்.
2. காபி ஒரிஜினல் சுவையில் வேண்டுமென்றால் அன்று கறந்த பாலில் தயாரிக்கவும்.
3. பாலை அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. ஒரு கொதி வந்தாலே போதும்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.