முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Weight Loss | உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்! இதை ஃபாலோ பண்ணா போதும்!

Weight Loss | உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்! இதை ஃபாலோ பண்ணா போதும்!

விஞ்ஞான ரீதியாக உங்களைச் சுற்றியுள்ள அதாவது நீங்கள் அடிக்கடி பார்க்கும் உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.

விஞ்ஞான ரீதியாக உங்களைச் சுற்றியுள்ள அதாவது நீங்கள் அடிக்கடி பார்க்கும் உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.

விஞ்ஞான ரீதியாக உங்களைச் சுற்றியுள்ள அதாவது நீங்கள் அடிக்கடி பார்க்கும் உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :

தற்போது பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. கலோரி குறைவான உணவுகளை உட்கொள்வது, பசியை கட்டுப்படுத்துதல், சரியான அளவு தண்ணீரைக் குடிப்பது, ஒவ்வொரு நாளும் போதுமான தூரம் நடப்பது போன்றவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இருப்பினும், ஒருவர் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியாது என்று நம்புவது கிட்டத்தட்ட தவறானது. நீங்கள் உடல்பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிந்து கொழுப்பை குறைகிறது. இதனால் உடல் எடை குறையும். அதேநேரத்தில் உடற்பயிற்சி செய்தால் மட்டும் தான் உடல் எடை குறையும் என கூறிவிடமுடியாது. மாறாக உங்கள் அன்றாட வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் செய்தாலே உடல் எடையை குறைக்கலாம்,

உங்கள் உணவை நீங்களே சமைக்கலாம்:

உங்கள் உணவை நீங்களே சமைத்து சாப்பிடுவது அனைத்து வகைகளிலும் நல்லது. இது உங்கள் செலவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, நீங்களே சமைக்கும் போது உங்கள் உணவில் என்னென்ன பொருள்களை சேர்க்க வேண்டும் மற்றும் அதன் அளவை நீங்களே முடிவு செய்யலாம். உங்கள் சொந்த உழைப்பில் உருவான நேர்த்தியான உணவை சுவைத்து சாப்பிடுங்கள். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவை உண்ணுவது குறைவாக சாப்பிடுவதையும், ஆரோக்கியமாக மாறுவதையும் நிரூபிக்கிறது.

மெதுவாக சாப்பிடுங்கள்:

சிலர் தங்கள் உணவை சாப்பிடும் போது அவசர அவசரமாக சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது தவறு. உங்கள் உணவை மெதுவாக மென்று சாப்பிடுங்கள். வேகமாக சாப்பிடுவது அதிகமான கலோரிகளைப் பெறுவதோடு தொடர்புடையது. எனவே, மெதுவாக சாப்பிட்டால் குறைந்த அளவு உணவு சாப்பிட்டாலே உங்களை முழுதாக உணர வைக்கிறது மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளைப் பெற உதவுகிறது. இதனால் அதிக அளவு சாப்பாடு சாப்பிவது தவிர்க்கப்படும்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்:

விஞ்ஞான ரீதியாக உங்களைச் சுற்றியுள்ள அதாவது நீங்கள் அடிக்கடி பார்க்கும் உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்கள். ஆரோக்கியமான உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியமற்ற எண்ணெய் பண்டங்கள், பேக் செய்யப்பட்ட உணவு, குளிர்பானங்கள், வறுத்த கோழி, துரித உணவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. அதற்கு மாற்றங்கள் உங்களால் முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகள், தின்பண்டங்களை சாப்பிடுங்கள்.

Also Read | ‘40 வயதினிலே’… 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே… 5 எஃபெக்டிவ் டிப்ஸ்!

வைட்டமின் டி, ஹைட்ரேட் அவசியம்:

உடல் எடையை குறைப்பது உங்கள் மூளையில் அதிகரிக்கும் மன அழுத்தத்தோடு நேரடியாக தொடர்புடையது. தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் கடுமையான ஹார்மோன் ஏற்றத்தாழ்வை உருவாக்கும், இது உங்கள் எடையை அதிகரிக்கிறது. உங்கள் மன அழுத்தத்தால் தூக்கத்தை இழக்கச் செய்யாதீர்கள். தினமும் யோகா செய்யுங்கள். மன அழுத்தத்தால் பாதிப்பதாக நீங்கள் உணரும்போதெல்லாம், உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுங்கள். மேலும் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் நீரேற்றமாக இருப்பது உங்கள் உடல் மற்றும் அருமை ஆரோக்கியத்திற்கு அவசியம். அதேபோல உங்கள் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் டி சத்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மட்டுமின்றி, காலை வெயிலில் சிறிது நேரம் இருப்பதும் அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிற்றுண்டி பழக்கத்தை கட்டுப்படுத்தவும்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சிற்றுண்டிகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு பிடித்த OTT இயங்குதளங்கள் அல்லது ஷாப்பிங் தளங்கள் மூலம் உலாவும்போது சிற்றுண்டிகளை சாப்பிட்டு கொண்டே வேலைகளில் எடுப்பது சிலருக்கு வழக்கமான ஒன்றாகி விட்டது. இது உங்களுக்கு பிடித்த ஒன்றாக தெரியலாம், ஆனால் நீங்கள் உண்ணும் முறையை மாற்ற வேண்டிய நேரம் இது. அதற்கு பதிலாக எண்ணெய்யில் தயார் செய்யப்படாத உணவுகள், பழங்கள் ஆகிய குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடலாம்.

First published:

Tags: Exercise, Healthy Food, Healthy Life, Weight loss