இந்த மூன்று பொருள் இருந்தா போதும் வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்யலாம்: ட்ரெண்டாகும் ரெசிபி!

ஐஸ் கிரீம்

கொரோனா ஊரடங்கு போடப்பட்ட முதல் மாதத்தில் எப்படி டல்கோனா காபி பிரபலமானதோ அதேபோல இந்த ரெசிபியும் பிரபலமாகும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
தொற்றுநோய்க்கு மத்தியில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருந்த சமயத்தில் இணையவாசிகளின் பல விஷயங்கள் ஒரு ட்ரெண்டை உருவாகின. அதில் ஒன்று தான் சமையல் வீடியோக்கள். ஊரடங்கு சமயங்களில் டல்கோனா காபி, பிஸ்கட் கேக் என பல ரெசிபிக்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலானது. இந்தியா முழுவதும் மக்கள் தங்கள் வீட்டிலேயே செய்த ரெசிபிக்களை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வந்தனர். இப்பொது அந்த வரிசையில் ஐஸ்க்ரீம் ரெசிபியும் இணைந்துள்ளது.

பிரிஸ்பேனைச் சேர்ந்த உணவு ஆர்வலரான மோன் என்பவர் சமீபத்தில் டிக்டோக்கில் ஒரு இனிப்பு செய்முறையைப் பகிர்ந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த இனிப்பு வகைக்கு வெறும் மூன்று பொருட்களை மட்டுமே அவர் சேர்த்தார் என்று டெய்லி மெயில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவர் வீட்டிலேயே ஐஸ்கிரீமை உருவாக்க உபயோகப்படுத்திய மூன்று பொருட்களில் கிளாசிக் அர்னாட்டின் ஐஸ் வோவோ (Arnott's Iced Vovo) என்ற பிஸ்கட் இடம்பெற்றுள்ளது. பிஸ்கட்டின் மேல் இளஞ்சிவப்பு ஃபாண்டண்ட், நடுவில் ராஸ்பெர்ரி ஜாம் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவை இருக்கும்.

இந்த வீடியோ சுமார் 103,000 பேரால் பார்வையிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் "என்னைப் போன்ற ஒரு குழந்தையாக நீங்கள் ஐசட் வோவோவைப் பார்த்திருந்தால், நீங்கள் இதை முயற்சி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஐஸ்கிரீமை தயாரிக்க மோன், கிரீம், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் ஐஸ் வோவோ பிஸ்கட் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். பிஸ்கட்டில் உள்ள ராஸ்பெர்ரி ஜாம் மற்றும் தேங்காயையும் சேர்த்துள்ளார்.

ரவையில் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் : குழந்தைகளுக்கு காட்டாயம் பிடிக்கும்!

வீடியோவில், "அரை கப் கன்டென்ஸ்டு பாலை அளந்து, அதனை கிரீம் உடன் சேர்த்து, மென்மையான அமைப்பைப் பெற அதை நன்றாகத் பீட் செய்தார். பின்னர் அவர் ஆறு ஐஸ் வோவோ பிஸ்கட்டுகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதனை கிரீம் மற்றும் பால் இருந்த கிண்ணத்தில் சேர்த்து மீண்டும் நன்கு பீட் செய்துள்ளார். பின்னர், கிரீமை சிறிய பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் சில பிஸ்கட் துண்டுகளை தூவி விட்டார். அதன்பிறகு இந்த கலவை குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் இருக்க வேண்டும்" என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வளவு தான் சூப்பரான ஐஸ்க்ரீம் தயார். 
View this post on Instagram

 

A post shared by Rob Gras (@rob.gras)


மேலும் மோன் அந்த பதிவில் குறிப்பிட்ட மற்றொரு விஷயம் என்னவென்றால், "நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் கிரீம் உண்மையிலேயே மென்மையாகும் வரை அதை நன்கு பீட் செய்ய வேண்டும்" என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பதிவிட்ட மோன், மற்றவர்களும் இதனை செய்து பார்க்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு போடப்பட்ட முதல் மாதத்தில் எப்படி டல்கோனா காபி பிரபலமானதோ அதேபோல இந்த ரெசிபியும் பிரபலமாகும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published: