• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Weight Loss Drinks : உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் ஆரோக்கிய பானங்கள்.. ட்ரை பண்ணி பாருங்க..

Weight Loss Drinks : உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் ஆரோக்கிய பானங்கள்.. ட்ரை பண்ணி பாருங்க..

காட்சி படம்

காட்சி படம்

Weight Loss Tips : எளிதாக வீட்டில் தயாரிக்க கூடிய பானங்களை குடித்து வந்தாலே எடையை குறைக்கலாம்.

  • Share this:
பொதுவாகவே உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சீரான முறையில் உடல் எடையை குறைக்க பலவித டயட், உடற்பயிற்சிகள், சத்தான உணவுகள் போன்ற பல்வேறு வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். ஆனால் மிக எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க, வீட்டிலே தயாரிக்க கூடிய சில பானங்களை குடித்து வந்தாலே போதுமானது.

உடலின் வளர்சிதை மாற்றமும், உடல் எடை குறைப்பும்:

உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் மத்தியில் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம் என்பது மிகவும் பிரபலமானது. வளர்சிதை மாற்றம் என்பது செல்களின் வளர்ச்சி நிலையைக் குறிக்கிறது. இதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, உடலுக்கு தேவையான ஆற்றலை உண்டாக்கும் 'கேடபாலிசம்'(Catabolism) என்று கூறப்படுகிறது; மற்றொன்று, செல்களுக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யும் 'அனபாலிசம்' (anabolism). உங்களின் மெட்டபாலிசம் அதிகமாக இருந்தால் நீங்கள் வேலை செய்யும் போதும், ஓய்வாக இருக்கும் போதும் அதிக கலோரிகள் குறையும். எனவே இதன்மூலம் நீங்கள் எளிதாக அதிக எடையை குறைக்கலாம்.

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் 3 பானங்கள் :

எளிதாக வீட்டில் தயாரிக்க கூடிய இந்த பானங்களை குடித்து வந்தாலே, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையை குறைத்திடலாம். நீங்கள் வீட்டிலே தயாரிக்க கூடிய சில முக்கிய எடை குறைப்பு பானங்கள் இதோ.

1. இஞ்சி, எலுமிச்சை, தேன் கலந்த பானம் :

இந்த பானத்தை தயார் செய்ய 1 லிட்டர் நீர், 2 எலுமிச்சை, ஒரு இன்ச் துருவிய இன்சி, அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நீரை ஊற்றவும். பிறகு 2 எலுமிச்சை பழத்தை சிறுசிறு துண்டாக வெட்டி அதில் போடவும். அடுத்து 1 எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்க்கவும். இஞ்சி மற்றும் மிளகை இதில் சேர்க்கவும். எலுமிச்சை பழம் மென்மையாகும் வரை இந்த பானத்தை கொதிக்க விட வேண்டும். இது வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில், வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.

எலுமிச்சை, உடலில் இன்சுலின் தடுப்பை குறைத்து, கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். இதிலுள்ள இஞ்சி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

also read : பூண்டு, வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

2. இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், கருப்பு மிளகு கலந்த பானம்

இந்த பானத்தை தயாரிக்க உங்களுக்கு 1 லிட்டர் தண்ணீர், 3 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 2 இன்ச் இலவங்கப்பட்டை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கருப்பு மிளகு மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு தேவைப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் நீரை ஊற்றவும். பிறகு பெருஞ்சீரகம், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து 5-7 நிமிடம் வரை இதை கொதிக்க விடுங்கள். வெதுவெதுப்பானதும் இதை வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

இலவங்கப்பட்டையில் அதிக ஆன்ட்டி-ஆக்சிடென்ட் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இது சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும். இந்த பானத்தில் சேர்த்துள்ள பெருஞ்சீரகம் செரிமான பிரச்சனையை சரிசெய்யும் மற்றும் எதிர்ப்பு சக்தியை கூட்டும். மேலும் இதிலுள்ள கருப்பு மிளகு, உடல் எடையை குறைக்க செய்யும் சிறந்த மூலப்பொருள் ஆகும்.

also read : தீபாவளிக்கு உங்கள் வீட்டை இப்படி அலங்கரியுங்கள்.. சிம்பிள் டிப்ஸ் இதோ..

3.கிரீன் டீ மற்றும் மின்ட் கலந்த பானம்

இந்த பானத்தை எளிதாக தயார் செய்ய 2 டீஸ்பூன் கிரீன் டீ இலைகள், 6-7 புதினா இலைகள், 1 கப் தண்ணீர் தேவைப்படும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி கொள்ளவும். பிறகு புதினா இலையை சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். இப்போது இதில் கிரீன் டீ இலைகள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். இந்த பானம் வெதுவெதுப்பானதும், வடிகட்டிய பின் குடியுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: