முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சளியை விரட்டனுமா.? சாப்பிட சுருக்கென இருக்கும் தூதுவளைத் துவையல் ரெசிபியை ட்ரை பண்ணுங்க.!

சளியை விரட்டனுமா.? சாப்பிட சுருக்கென இருக்கும் தூதுவளைத் துவையல் ரெசிபியை ட்ரை பண்ணுங்க.!

தூதுவளை துவையல்

தூதுவளை துவையல்

தூதுவளை இருமல், சளித்தொல்லைக்கு சிறந்த நிவாரணம் தரும். இந்த துவையலை சப்பாத்தி, இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாறி மாறி வரும் பருவநிலை காரணமாக வீட்டிற்கு ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலை வலி, தொண்டை வலி என ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூதுவளை சளிக்கு நல்ல மருந்து. ஈஸியாக சட்டென அரைத்து விடலாம். இந்த துவையலில் சிறிது புளிப்பு சுவை இருப்பதனால் தொட்டு சாப்பிட சுருக்கென சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு

புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

உளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - ஒன்று

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். தூதுவளை இலையையும் வாணலியில் போட்டு வதக்கிக்கொள்ளவும். பின்பு இவற்றை ஒன்று சேர்த்து உப்பு, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு:

தூதுவளை இருமல், சளித்தொல்லைக்கு சிறந்த நிவாரணம் தரும். இந்த துவையலை சப்பாத்தி, இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

First published:

Tags: Cold, Cough, Home remedies