முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தூதுவளை துவையல் எப்படி செய்யனும் தெரியுமா..? சளி , இருமலுக்கு நல்லது..!

தூதுவளை துவையல் எப்படி செய்யனும் தெரியுமா..? சளி , இருமலுக்கு நல்லது..!

தூதுவளை துவையல்

தூதுவளை துவையல்

இதை வாரத்தில் ஒருமுறையேனும் அரைத்து சாப்பிட்டால் சளி , இருமல் இருக்காது. இருந்தாலும் போய்விடும் என்று சொல்லப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூதுவளை இலை பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படுகிறது. இதை வாரத்தில் ஒருமுறையேனும் அரைத்து சாப்பிட்டால் சளி , இருமல் இருக்காது. இருந்தாலும் போய்விடும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த பருவ மழைக்கு நீங்களும் வீட்டில் இதை அரைத்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருள்கள்

தூதுவளை இலை - 2 கப்

புதினா - 1 கப்

பூண்டு - 4 பல்

இஞ்சி - 1/2 துண்டு

சிறிய வெங்காயம் - 10

சிவப்பு மிளகாய் - 6

எண்ணெய் - 2 டீஸ்பூன்

புளி - பாதி எலுமிச்சை அளவு

துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும்.

கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

சுண்டைக்காய் பொரியல் இப்படி செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்...

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.

இப்போது சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி.

First published:

Tags: Food recipes, Monsoon Diseases