• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கடுமையான மார்பு சளி, இருமலா..? வீட்டில் எல்லோருக்கும் உடனே தூதுவளை ரசம் வச்சு கொடுங்க….ரெசிபி இதோ…

கடுமையான மார்பு சளி, இருமலா..? வீட்டில் எல்லோருக்கும் உடனே தூதுவளை ரசம் வச்சு கொடுங்க….ரெசிபி இதோ…

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்

இதுபோன்ற சமயத்தில் பாரம்பரிய நாட்டு மருத்துவ முறைகளை உணவின் வழியாக கொடுக்கும்போது பக்கவிளைவுகளின்றி பிரச்னைகளை தவிர்க்கலாம். சளி ,இருமல் இல்லை என்றாலும் இந்த தூதுவளை ரசம் வைத்து சாப்பிடுங்கள்.

  • Share this:
பருவநிலை மாற்றத்தால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, இருமல் வருகிறது. இதுபோன்ற சமயத்தில் பாரம்பரிய நாட்டு மருத்துவ முறைகளை உணவின் வழியாக கொடுக்கும்போது பக்கவிளைவுகளின்றி பிரச்னைகளை தவிர்க்கலாம். சளி ,இருமல் இல்லை என்றாலும் இந்த தூதுவளை ரசம் வைத்து சாப்பிடுங்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தூதுவளை கீரை - 1கப்
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 6
புளி - எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1/2 tsp
கடுகு - 1/2 tsp
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1/4 tsp
மிளகு - 1tbsp
சீரகம் - 1 tbsp
நெய் - 2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

தூதுவளையை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு கடாய் வைத்து நெய் விடுங்கள். காய்ந்ததும் தூதுவளை கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலந்துவிடுங்கள்.

மலச்சிக்கலை போக்கும் சிவப்பு பசலை கீரை மசியல்...

அதோட் மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.

பின் தூதுவளையை மிக்ஸியில் அரைத்து சேருங்கள். இறுதியாக உப்பு சேருங்கள். இதை நன்றாக கொதித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் தாளிக்க கடாய் வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள் சேர்த்து பின் அதை அந்தக் கலவையில் கொட்டுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: