Thoothuvalai | தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் சளி, இருமல் போன்ற நோய்களௌம் வராமல் தடுக்கும். இன்று தூதுவளையை வைத்து தோசை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
தூதுவளை கீரை - அரை கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - கால் கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
இஞ்சி, மிளகாய் விழுது - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
தூதுவளை
செய்முறை:
முதலில் தூதுவளை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும். அரிசி, உளுந்து இரண்டையும் மூன்று மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். வெந்தயத்தையும் ஊறவைத்து அதனுடன் தூதுவளை சேர்த்து அரைத்து மாவில் சேர்க்க வேண்டும்.
பின்னர் மாவு கலவையுடன் உப்பு சேர்த்து சில மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு மாவுடன் இஞ்சி மிளகாய் விழுதை கலந்து கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறலாம். இப்போது சூப்பரான தூதுவளை தோசை ரெடி.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.