பாஸ்தாவுக்கு மேலும் சுவை சேர்க்கக்கூடிய பசலைக்கீரை பேசில் பெஸ்டோ சாஸ்... ஆரோக்கியமோ ஏராளம்!

கோப்புப் படம்

இத்தாலிய உணவு ஆர்வலர்களிடையே பெஸ்டோ சாஸ் மிகவும் பிரபலமானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உங்களுக்கு பிடித்த பாஸ்தா உணவுகள் அல்லது பீஸ்ஸாவில் சில ஆரோக்கியமான விஷயங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால், அப்போ காட்டாயம் நீங்கள் பெஸ்டோ சாஸை சேர்க்கலாம். இதனை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்யலாம். பச்சை நிறத்தில் இருக்கும் இந்த சாஸ் துளசி இலைகளால் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர, பூண்டு, சீஸ், பைன் கொட்டைகள் அதாவது வால்நட்ஸ், ஆலிவ் எண்ணெய் மற்றும் கருப்பு மிளகு தூள் போன்ற பிற பொருட்களும் இதில் சேர்க்கப்படுகின்றன. சாசிற்கு தேவைப்படும் மென்மையான பேஸ்ட் பதத்தை உருவாக்க மேற்கண்ட அனைத்து பொருட்களையும் மிக்சியில் ஒன்றாக சேர்த்து அரைத்தாலே போதும் பெஸ்டோ சாஸ் ரெடி.

பின்னர், இந்த பெஸ்டோ சாஸை பாஸ்தா செய்யும்போது சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் வீட்டிலேயே பீஸ்ஸா தயாரித்தால் அதில் இந்த சாஸை ஸ்மியர் செய்ய பயன்படுத்தலாம். இத்தாலிய உணவு ஆர்வலர்களிடையே பெஸ்டோ சாஸ் மிகவும் பிரபலமானது. இதில் அடங்கியுள்ள பொருட்கள் உடலுக்கு நன்மையை சேர்க்கிறது. இருப்பினும் சாஸிற்கு மேலும் கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் ஒரு தனித்துவமான செய்முறையும் இருக்கிறது. அதாவது, இதனுடன் ஊட்டச்சத்து நிறைந்த பொருளான பசலைக்கீரையை சேர்த்தால் சாஸ் மேலும் சுவையடையதாகவும், ஆரோக்கியத்தை தருவதாகவும் இருக்கும்.துளசி மற்றும் பசலைக்கீரை பெஸ்டோ சாஸ் அதிக சுவைகள், அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக ஜிங் சத்துக்கள் ஆகியவற்றை நமக்குத் தருகிறது. இந்த சாஸில் இருக்கும் ஒவ்வொரு உணவுபொருட்களும் உடலுக்கு நல்லதை சேர்க்கும். இந்த துளசி மற்றும் பசலைக்கீரை பெஸ்டோ சாஸை சாலட்களில் டாஸ் செய்யலாம். இதுதவிர சாண்ட்விச்களிலும் இந்த சாஸை சேர்க்கலாம். சிப்ஸ், வெஜ்ஜிஸ், பிரெஞ்சு பிரைஸ் ஆகிய தின்பண்டங்களை சாஸில் டிப் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த பேசில் மற்றும் பசலைக்கீரை பெஸ்டோ சாஸை எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

Also read... பாஸ்தா, பிரெட் சாண்ட்விச் தான் உங்கள் ரீசன்ட் ஃபேவரெட்டா..? அப்போ இதையும் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

1. இரண்டு கப் துளசி இலைகளையும் அரை கப் பசலைக்கீரையை மிக்சி-கிரைண்டரில் சேர்த்து அதனுடன் வால்நட்ஸ், கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

2. முதலில் கொஞ்சம் கரகரப்பாக பேஸ்ட் கிடைக்கும் வரை அரைக்க வேண்டும்.

3. பின்னர் சுமார் 1/4 கப் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து, மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை மீண்டும் அரைக்க வேண்டும்.

4. பின்னர் மிக்ஸியில் இருந்து பேஸ்டை ஒரு பவுலுக்கு மாற்ற வேண்டும். அவ்வளவுதான் உங்கள் துளசி, பசலைக்கீரை பெஸ்டோ சாஸ் ரெடி.

5. உங்களுக்கு தேவையான அளவு சாஸில் மாசாலா பொருட்களின் அளவை கூட்டவோ அல்லது குறைத்தோ தயார் செய்யலாம். மேலும் நீங்கள் விரும்பினால் பேஸ்ட்டை அரைக்கும் போது அத்துடன் துருவிய சீஸை சேர்த்துக்கொள்ளலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: