முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

தயிர்

தயிர்

உங்களுக்கு தொண்டை வலி, இருமல், சளி போன்ற பிரச்சினைகள் இருந்தால் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியர்கள் ஒவ்வொருவரின் உணவிலும் தவிர்க்க முடியாத உணவுப் பொருள் தயிர் ஆகும். குறிப்பாக தமிழர்கள் தினசரி மதிய வேளையில் தயிர் சேர்த்துக் கொள்வதை பாரம்பரியமாகக் கொண்டவர்கள். சின்னஞ்சிறு குழந்தைகள் கூட மறுக்காமல், அடம் பிடிக்காமல் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தயிர் சாதம் ஆகும்.

பெரும்பாலும் லெஸ்ஸி, மோர் அல்லது சாலட் என ஏதோ ஒரு வகையில் நாம் தயிர் சார்ந்த உணவை எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். தயிர் செரிமானத்திற்கு உதவுகிறது என்பதாலும், குடல் நலன் பாதுகாக்க உதவுகிறது என்பதாலும் பெரும்பாலானவர்கள் தவறாமல் தினசரி தயிர் சாப்பிடுகின்றனர்.

ஆனால், தயிர் சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காட்டிலும், அதை தவறான முறையில் சாப்பிட்டால் தீமைகள் அதிகம் ஏற்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தயிர் சாப்பிடுவது குறித்து ஆயுர்வேதம் சொல்வது என்ன?

மழைக்காலங்களில் தயிர் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேத புத்தகங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் பருவகால மாற்றங்கள் காரணமாக வாதம், பித்தம், கபம் ஆகியவை சமநிலை தவறும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக மழைக்காலங்களில் வாதம் மற்றும் பித்தம் ஆகியவை அதிகமாக இருக்கும் நிலையில், பல்வேறு நோய்கள் ஏற்பட அது காரணமாக அமைகிறது. மழைக்காலத்தில் எப்படி தயிர் சாப்பிடக் கூடாது? எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் இந்த செய்தியில் இருக்கின்றன.

தண்ணீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?

மூட்டு வலி அதிகரிக்கும்

மூட்டு வலி மற்றும் எலும்பு வலி போன்ற பிரச்சனையை எதிர்கொள்ளும் மக்கள் மழைக்காலத்தில் தயிர் சாப்பிடக் கூடாது. தயிர் சாப்பிட்டால் உடலில் சளி அளவு அதிகரிக்கும். அது வலியை மோசமானதாக மாற்றிவிடும்.

கரகரப்பான தொண்டை மற்றும் சளி

உங்களுக்கு தொண்டை வலி, இருமல், சளி போன்ற பிரச்சினைகள் இருந்தால் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் தான் மழைக்காலத்தில் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. சைனஸ் மற்றும் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்களும் இதை தவிர்க்க வேண்டும்.

தயிர் சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை

தயிர் பல நன்மைகளை தரக் கூடியது என்றாலும், தவறான உணவு சேர்க்கை என்பது மோசமான பாதிப்புகளை உண்டாக்கும். அதாவது இரண்டு புரதங்கள் அல்லது சிட்ரிக் உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. அது ஆசிட் ரிஃபளக்ஸ், நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதே சமயம், மழைக்காலத்தில் நீங்கள் தயிர் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் அதனுடன் ஒரு சிட்டிகை ஜீரக தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். பழைய தயிரை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

First published:

Tags: Curd, Monsoon