உணவுக்கு சுவை கூட்ட உப்பு,மிளகுத்தூளை எப்படி ஷேக் செய்கிறீர்கள்..? அதிசயிக்கும் இந்த பெண்ணின் வீடியோவை பாருங்கள்..!

உணவுக்கு சுவை கூட்ட உப்பு,மிளகுத்தூளை எப்படி ஷேக் செய்கிறீர்கள்..? அதிசயிக்கும் இந்த பெண்ணின் வீடியோவை பாருங்கள்..!

மாதிரி படம்

அனைவரது வீட்டிலும் உப்பு மற்றும் மிளகு பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருளாகும்

  • Share this:
மிளகு, உப்பு இவற்றை எந்த உணவில் சேர்த்தாலும் அதன் சுவை அதிகரிக்கும். இவற்றை தனித்தனியாக அல்லது கூட்டாக பயன்படுத்தி பல்வேறு நன்மைகளைப் பெற முடியும். பல்வேறு உடல் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக இவை பயன்படுகின்றன. பாரம்பரிய மருந்துகளில் இந்த இரண்டு பொருட்களும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. அனைவரது வீட்டிலும் உப்பு மற்றும் மிளகு பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருளாகும்.

உங்களது உணவின் சுவையை அதிகரிக்க உணவுகளில் உப்பு மற்றும் மிளகை பயன்படுத்துவதில் குழப்பமானதாக இருந்தால் அதற்கென சில ஹேக்ஸ் உள்ளது. சமீபத்தில், ஒரு யூடியூபர் ஒருவர் இதுகுறித்த வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில் அதிக முயற்சி எடுக்காமல் மிளகு, உப்பு இவற்றை சேர்த்து சுவையூட்டும் உணவுகளை தயாரித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வியப்படைந்துள்ளார்கள்.

இந்த வைரல் வீடியோவை 'ஸ்டோரிலைன்ஸ்' வெளியிட்டது, அதில் மிளகு ஷேக்கரை பயன்படுத்துவதற்கான சரியான மற்றும் எளிதான வழி குறித்து விளக்கியுள்ளனர்.



அந்த வீடியோவில் "உப்பு மற்றும் மிளகு ஷேக்கரைப் பயன்படுத்துவதற்கான சரியான வழியை கற்றுக்கொடுக்கிறார். முதலில் உங்கள் மிளகு ஷேக்கரை திறந்து மிளகு கொண்டு நிரப்ப வேண்டும். பின்னர் அரைக்கும் பகுதியை திருவி மிளகை தூளாக்க வேண்டும். இதனை உணவில் தூவுவதற்கு முன்னர், ஷேக்கர் பாட்டிலை ஆக்ரோஷமாகத் தட்டுவதை விட, நீங்கள் எளிதாக பயன்படுத்தலாம் . அதாவது மிளகு ஷேக்கரை தலைகீழாக கவிழ்த்து உப்பு ஷேக்கரின் அடிப்பகுதியைக் கொண்டு தேய்க்க வேண்டும். அதாவது அடியில் இருக்கும் சொரசொரப்புப் பகுதியில் தேய்க்க வேண்டும். அப்படி தேய்க்கும்போது கிடைக்கும் அதிர்வினால் மிளகுத்தூள் தானாக கீழே தூவப்படுகிறது. எனவே மாங்கு மாங்கென நீங்கள் தட்டுவதை விட இப்படி செய்து பாருங்கள். இதுதான் உப்பு, மற்றும் மிளகுத் தூளை உணவில் தூவ சரியான முறை என்கிறார் அந்தப் பெண்.  இதேமுறையை உப்பு பயன்படுத்துவதற்கும் பின்பற்றலாம்.



உப்பு மற்றும் மிளகை உணவில் சரியாக சேர்க்க மற்றொரு எளிதான விஷயம் என்னவென்றால், உப்பு மற்றும் மிளகு இரண்டையும் ஒரு தட்டில் எடுத்து ஒன்றாக கலந்து விடலாம். இந்த கலவையை ஒரு ஷேக்கரில் எடுத்து பத்திரப்படுத்தி மேற்கண்ட முறையில் உணவில் சேர்க்கலாம். ஒரு காரமான உப்பு மற்றும் மிளகு கலவை தயாரிக்கப்படும் உணவு வகைகளில் சேர்ந்த நீங்கள் இந்த கலவையை பயன்படுத்தலாம். இதற்கு அதிக நேரம் எடுக்காமல், மேற்கண்ட டிப்ஸ்களை பின்பற்றி செய்துவந்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.



மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள், தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் அறியப்படுகிறது. மிளகோடு உப்பு சேர்த்து பற்களை தேய்த்து வந்தால் பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும். சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தாக இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published: