ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Thiruvathirai Recipe | திருவாதிரை கூட்டு செய்ய ரெசிபி

Thiruvathirai Recipe | திருவாதிரை கூட்டு செய்ய ரெசிபி

திருவாதிரை கூட்டு

திருவாதிரை கூட்டு

Thiruvathirai Recipe | பொதுவாக திருவாதிரை கூட்டு 7 காய்கறிகளைக் கொண்டுதான் செய்வார்கள். அவை பரங்கிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அவரை, வெள்ளரிக்காய், காராமணி கேரட், கத்திரிக்காய், சௌசௌ, கொத்தவரங்காய் ஆகியவை ஆகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருவாதிரை நாளில் செய்யப்படும் கூட்டு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

நறுக்கிய காய்கறிகள் – 5 கப்

துவரம் பருப்பு (வேக வைத்தது) – ½ கப்

சாம்பார் பொடி – 1½ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தனியா – ¼ கப்

மிளகாய் வத்தல் – 6

கடலைப்பருப்பு – ¼ கப்

பெருங்காயம் – சிறியளவு

தேங்காய் (துருவியது) – ¼ கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

வெல்லம் – சிறிதளவு

அரிசி மாவு – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

செய்முறை

1. முதலில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், தேங்காய், பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

2. பின்னர் தண்ணீரில் காய்கறிகளைப் போட்டு உப்பு, சாம்பார் பொடி போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர், தனியா, கடலைப்பருப்பு உள்ளிட்டவற்றைச் சேர்த்து செய்த பொடியைப் போட வேண்டும்.

3. இதில் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். இது கொதித்த பின்னர் சிறிதளவு வெல்லம் போடவும்.

4. அதன் பிறகு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

5. இதில் வேக வைத்த துவரம் பருப்பையும், அரிசி மாவையும் கரைத்து ஊற்ற வேண்டும்.

6. அதன் பின்னர், மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

7.இப்போது, திருவாதிரை ஸ்பெஷலான காய் கூட்டு ரெடி.

8. இந்த காய் கூட்டையும் திருவாதிரை களியையும் சேர்த்து இறைவனுக்குப் படையலிட்டு பிறகு திருவாதிரை விரதத்தை முடிக்க வேண்டும்.

First published:

Tags: Food, Vegetables