ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Thiruvathirai Recipe | திருவாதிரை களி செய்ய ரெசிபி..!

Thiruvathirai Recipe | திருவாதிரை களி செய்ய ரெசிபி..!

திருவாதிரை களி

திருவாதிரை களி

Thiruvathirai kali | திருவாதிரை களியில் பாசி பருப்பு சேர்ப்பதால் அது உடலுக்கு நன்மை பயக்கும்.‘Moong Dhal’ என அழைக்கப்படும் இந்த பருப்பு பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மார்கழி திருவாதிரையில் சேத்தனார் என்ற சிவபக்தர் நடராஜருக்கு தன்னால் முடிந்த களியை செய்து உணவாக படைத்tதுள்ளார். அன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரமாகும். அதனால்தான் இந்த புனித நாளில் திருவாதிரை காளி ஒரு முக்கியமான பிரசாதமாக அமைகிறது.

திருடியாவது திருவாதிரை களி தின்ன வேண்டும் என்று நகைசுவையாக தென் மாவட்டங்களில் கூறுவார்கள். ஏனென்றால் திருவாதிரை களிக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. ஆருத்ரா தரிசனம் அன்று திருவாதிரை களி இல்லாமல் பூஜை நடக்காது. அந்த அளவுக்கு களி முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது திருவாதிரை களி நமது வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி ரவை – 1 கப்

பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

வெல்லம் – 3 / 4 கப்

தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

1. முதலில் பாசி பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும்.

2. பின்பு அரிசியையும் நன்கு வறுக்க வேண்டும். அதன் பிறகு மிக்ஸியில் பருப்பு, ஆரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 3 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.

4. வெல்லம் நன்கு கரைந்ததும் அதனை வடிகட்டி, கொதிக்க விட வேண்டும்.

5.  பின்பு, 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவைகளை அதனுடன் சேர்க்க வேண்டும்.

6.  இப்போது தீயை கொஞ்சம் சிமிலில் வைத்து விட்டு அரிசி கலவை கட்டி சேராமல் நன்கு கிளற வேண்டும். தேவைப்பட்டால் சுடு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

7. சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து, நடுநடுவே கிளறி விடவும்.

ரவை வெந்ததும் தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி தூவி கிளறி விட்டு இறக்க வேண்டும்.

8. இப்போது சுவையான திருவாதிரை களி தயார்.

குறிப்பு: நெய் அதிகமாக ஊற்றினால் சுவை கூடுதலாக இருக்கும். நெய் பிடிக்கதவர்கள் போட வேண்டாம்.

First published:

Tags: Sweet recipes