உலகமே கொண்டாடும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் தலம் திருவையாறு. திரு+ஐந்து+ஆறு... காவிரியும் அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய 5 ஆறுகளாக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. மிக பிரபலமான ஒரு விஷயம் இங்கு உண்டு. அதுதான் திருவையாற்றில் மட்டுமே கிடைக்கும் அசோகா. அதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - செய்யும் அளவுக்கு ஏற்றார் போல்
கோதுமை மாவு -பாசிப்பருப்புக்கு சற்று குறைவாக...
மைதா மாவு - 2 ஸ்பூன்
சர்க்கரை - 3 கோப்பை
நெய் - ஒன்றரை கப்
ஏலக்காய் தூள் - கால் ஸ்பூன்
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 20 கிராம்
ஆரஞ்சு கேசரி தூள் - ஒரு சிட்டிகை
அசோகா செய்முறை ரகசியம்
கோதுமை மாவுடன் மைதா மாவை சேர்த்து சலித்து வைக்கவும்.
பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வெறும் வறு சட்டியில் வறுத்துக் கழுவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நிதானமான தீயில் வேக விடவும்.
அடி கனமான இன்னொரு பாத்திரத்தில் ஒரு கோப்பை நெய் விட்டு, அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
அந்த நெய்யில் கோதுமை - மைதா மாவு கலவையை சேர்த்து வறுக்கவும். நிதானமான தீயில் கைவிடாமல் கிளறி வறுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாவு பொன்னிறமாகி நன்கு வாசனை வரும்.
இந்தப் பதத்தில் வேக வைத்த பருப்புச் சேர்த்து கிளறவும். பருப்பு நன்கு மசிந்து மாவுடன் கலக்கும்போது சர்க்கரையையும் கேசரி பொடியையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தின் ஓரம் ஒட்டாமல் சுருண்டு, அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையும், ஏலக்காய் பொடியும், மீதமுள்ள நெய்யும் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான அசோகா ரெடி.
மேலும் படிக்க... ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்ய ரெசிபி ...
குறிப்பு
1 . கைவிடாமல் கிளற வேண்டும் என்பது எல்லா வகை அல்வாக்களுக்குமே பொதுவானது. கட்டி தட்டாமல் இருக்கவே கிளறிவிட வேண்டும்.
2 . ஆரஞ்சு கேசரி தூள் உங்கள் விருப்பத்துக்கு உட்பட்டது. அதைத் தவிர்த்தாலும் சுவையில் குறையில்லை!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sweet recipes