ஆரணியில் ஹோட்டலில் அசைவ உணவு உட்கொண்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹோட்டல்களில் சாப்பிடும் முன்பு என்னென்னெ விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
குடும்பத்துடன் ஹோட்டல்களுக்குச் சென்று உணவருந்துவது என்பது இன்றைக்கு தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. வீட்டில் உடனடியாக சமைக்க முடியாத விதவிதமான உணவுகளை. ஹோட்டல்களுக்குச் சென்று உண்ணுவது வாடிக்கையாகி விட்டது. அவ்வாறு செல்லும்போது ஹோட்டல்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.
முதலில் ஹோட்டலின் உட்புறத் தூய்மை நன்றாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.ஹோட்டல்களில் "சுத்தமான நீர் பயன்படுத்தப்படுகிறது" என எழுதி வைத்திருக்க வேண்டும்.உணவு உண்ணும் இடத்திற்கு அருகில் கழிப்பறை இருக்கக்கூடாது.அதேபோல உணவு தயாரிக்கும் இடத்துக்கு அருகிலும் கழிப்பறை இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், இறைச்சியை பாதுகாத்து வைக்க குளிர்சாதன வசதி உள்ளதா என்பதை பொதுமக்கள் பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். உணவுப் பண்டங்களில் செயற்கை வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்படக்கூடாது. உணவின் சுவையில் மாற்றம் தெரிந்தால் அதனை உண்பதை தவிர்த்து விடவேண்டும்அப்படி இருந்தால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
முடிந்தவரை அசைவ உணவுகளை வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கெட்டுப்போன சைவ உணவை விட, அசைவ உணவில் தான் ஆபத்து அதிகம். ஹோட்டலில் சாப்பிட்டதும் மயக்கம், வயிற்றுவலி இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவேண்டும். இவற்றை முறையாக பின்பற்றினால் உணவின் பெயரால் ஏற்படும் உபத்திரவங்களை தவிர்க்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hotel, Hotel Food, Junk food, Restaurant