அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

மஞ்சள்

மஞ்சள் கிருமி நாசினி என்பது மட்டுமின்றி அன்றாட சமையலில் மஞ்சள் சேர்ப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம்.

  • Share this:
மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு. மஞ்சள் கிருமி நாசினி என்பது மட்டுமின்றி அன்றாட சமையலில் மஞ்சள் சேர்ப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் உதவுகிறது. இதனால் நோய்கள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக மழைக்காலத்தில் வரும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட மஞ்சள் உதவுகிறது. எனவே ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உங்கள் உணவு பட்டியலில் மஞ்சள் இருப்பதை கட்டாயமாக்குங்கள்.

எடை குறைய உதவுகிறது

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக மஞ்சளை பயன்படுத்தலாம். மஞ்சளை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சியைத் தணிக்கவும், கொழுப்பு எரிப்பதில் சிறப்பாகவும் செயல்படுகிறது. இதனால் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து அழகான உடலை பெறுவீர்கள். மேலும் மஞ்சள் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் இரத்த கொழுப்புகளின் அளவைக் குறைக்கும். இரத்த கொழுப்பு என்பது அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப்பிடும்போது உங்கள் இரத்தத்தில் உருவாகும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.

மேலும் படிக்க...வெந்தய கீரை கோழி குழம்பு எப்படி செய்வது?

கீல்வாதத்திற்கு நல்லது

கீல்வாதம் என்பது ரத்தஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கின்ற ஒரு நோயாகும். மஞ்சள் இயற்கையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் மூட்டுகளில் வலி, விறைப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் மஞ்சளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

உங்கள் மனசோர்வை நீக்குகிறது

மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நம் உடலில் சுரக்கும் சிலவகை ஹார்மோன்களே காரணம். அவை டோபமைன் (Dopamine), மற்றும் செரட்டோனின் (Serotonin) ஆகும். இவை ஆங்கிலத்தில் 'ஹேப்பி ஹார்மோன்' என அழைக்கப்படுகிறது. மஞ்சள் இந்த ஹார்மோன்களை தூண்ட உதவுகிறது. இதன் விளைவாக மனச்சோர்வால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் சேர்த்து சமைத்த உணவுகளை சாப்பிடலாம்.

சர்க்கரை அளவைக் குறைக்க

மஞ்சள் இரத்தச் சர்க்கரை குறைக்கும் முகவராக செயல்படுகிறது. இதனால் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் மஞ்சளை அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். தற்போது இளம்வயதினர் கூட நீரழிவு நோயால் அவதிப்படுபவதால், உங்கள் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே மஞ்சள் சேர்த்து கொடுங்கள்.

அல்சைமர் நோயைத் தடுக்க உதவும்

அல்சைமர் நோய் என்பது மறதியின் மிகவும் பொதுவான வடிவமாகும். அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த மூளை நோயால் நினைவாற்றலையும் சிந்தனைத் திறனையும் இழக்க நேரிடும். மஞ்சள் உட்கொள்வது உங்கள் நினைவக திறனை மேம்படுத்த உதவுகிறது. எனவே அல்சைமர் வருவதைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த மஞ்சள் உதவுகிறது.

மேலும் படிக்க... உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ரசம் வகைகள்.. இதோ ரெசிபி!

புற்றுநோய் வராமல் தடுக்க

மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நச்சுத்தன்மை இல்லாத குர்குமின், ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய லுக்கிமியா அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவுனி அரிசியின் பயன்கள் !

பெருங்குடல் அழற்சி பிரச்சனைக்கு

பெருங்குடல் அழற்சி ஒரு வகையான குடல் அழற்சி நோய். பெருங்குடலைப் பாதிக்கும் அழற்சி வடிவங்களில் ஒன்று. குடல் அழற்சி நோயின் இன்னொரு வடிவமான குரோகன் நோய் போன்றதே இதுவும். சில காலங்களில் அறிகுறிகள் தீவிரம் அடையும். எரிச்சலூட்டும் நோய்க்குறி உள்ளவர்கள் வயிற்று அசகரியத்தைத் தணிக்க மஞ்சள் உட்கொள்ளலாம். இது பெருங்குடல் அழற்சி பிரச்சனையை குணமாக்கும்.
Published by:Vaijayanthi S
First published: