Home /News /lifestyle /

ஆரோக்கியமான தினை இடியாப்பம் செய்வது எப்படி?

ஆரோக்கியமான தினை இடியாப்பம் செய்வது எப்படி?

தினை இடியாப்பம்

தினை இடியாப்பம்

thinai Idiyappam | நம் முன்னோர் அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். இதனால், அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று அவற்றில் தினை அரிசியின் நன்மைகளையும் அதில் எப்படி இடியாப்பம் செய்வது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
இரும்பு சத்தின் அளவு, மற்ற தானியங்களை விட, குறிப்பாக, அரிசி, கோதுமை, ராகியை விட, தினையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. அத்தகைய தினை அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

தினை மாவு - 250 கிராம்,

வெந்நீர் - 300 மி.லி.,

உப்பு - 2 டீஸ்பூன்,

அரிசி மாவு - 100 கிராம்.

தேங்காய்ப்பால் செய்ய...

முழு தேங்காய் - 1 (துருவியது),

ஏலக்காய்த்தூள் - 20 கிராம்,

கருப்பட்டி - 100 கிராம்.

தினை இடியப்பம்


செய்முறை

தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், கருப்பட்டி அனைத்தையும் சேர்த்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தினை மாவு, அரிசி மாவு, உப்பு, வெந்நீர் சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, இட்லி பானையில் 2 முதல் 3 நிமிடம் வரை வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த தேங்காய்ப் பாலுடன் பரிமாறவும்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Millets Food

அடுத்த செய்தி