முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Weight Loss | சாப்பிடுங்க… ஆனா வெயிட் குறையும்… உடல் எடையை குறைக்க உதவும் 4 ஸ்நாக்ஸ் லிஸ்ட் இதோ!

Weight Loss | சாப்பிடுங்க… ஆனா வெயிட் குறையும்… உடல் எடையை குறைக்க உதவும் 4 ஸ்நாக்ஸ் லிஸ்ட் இதோ!

சிறிது சோளத்தை ‘பாப்’ செய்து, சுவையான குறைந்த கலோரி, நார்ச்சத்து நிறைந்த தின்பண்டமாக உங்கள் பசியை பூர்த்தி செய்ய பாப்கார்ன் உதவும்.

சிறிது சோளத்தை ‘பாப்’ செய்து, சுவையான குறைந்த கலோரி, நார்ச்சத்து நிறைந்த தின்பண்டமாக உங்கள் பசியை பூர்த்தி செய்ய பாப்கார்ன் உதவும்.

சிறிது சோளத்தை ‘பாப்’ செய்து, சுவையான குறைந்த கலோரி, நார்ச்சத்து நிறைந்த தின்பண்டமாக உங்கள் பசியை பூர்த்தி செய்ய பாப்கார்ன் உதவும்.

  • Last Updated :

எல்லா தின்பண்டங்களும் எப்போதும் நமக்கு தீங்கு விளைவிப்பதில்லை. அதே போல, பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட உடல் எடையை குறைக்க உதவும் 5 ஆரோக்கியமான தின்பண்டங்கள் குறித்து பார்க்கலாம்.

உணவுக்கு இடையில் தின்பண்டங்கள் சாப்பிடுவது மோசமானதா அல்லது நல்லதா? என்ற கேள்வி பலருக்கு உண்டு. நீங்கள் உண்மையிலேயே பசியுடன் இருந்தால் அல்லது நாள் முழுவதும் ஆரோக்கியமான மற்றும் குறைந்த அளவிலான உணவை உட்கொண்டால் அது தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடும் உணவு, உங்கள் வாழ்க்கையின் வில்லனாக மாறலாம்.

பொதுவாக, நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடாத வரை தின்பண்டங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மாறாக, அது நீண்ட காலம் முழுமையாக இருக்கவும், ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான உங்கள் தேடலைக் குறைக்கவும் உதவும். இது ஊட்டச்சத்து குறைபாடு முதல் மரபியல் வரை பல்வேறு காரணங்களுக்காக இருக்கலாம். சரி, உடல் எடையை குறைக்க உதவும் 5 ஸ்நாக்ஸ் குறித்த விவரம் இங்கே.

மிட்டாய் அல்லது சாக்லேட்டுக்கு பதிலாக பழங்கள்:

பழங்களில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர் உள்ளடக்கம் உள்ளன. மேலும், கொழுப்பு, சோடியம் மற்றும் கலோரி குறைவாக உள்ளது. இது உங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நீண்ட நேரம் முழுதாக உணர உதவுகிறது.

சிப்ஸுக்கு பதிலாக பாப்கார்ன்:

வறுத்த சிப்ஸ்களில் சோடியம் மற்றும் வெற்று கலோரிகள் மட்டுமே நிறைந்துள்ளன. அதற்கு பதிலாக, சிறிது சோளத்தை ‘பாப்’ செய்து, சுவையான குறைந்த கலோரி, நார்ச்சத்து நிறைந்த தின்பண்டமாக உங்கள் பசியை பூர்த்தி செய்யவும், அதே நேரத்தில் உங்கள் உணவில் பல்வேறு வகைகளை சேர்க்கவும் பாப்கார்ன் உதவும்.

Must Read | உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்! இதை ஃபாலோ பண்ணா போதும்!

பிஸ்கெட்டுகளுக்குப் பதிலாக வேர்க்கடலை:

வேர்க்கடலை உங்கள் உணவில் நல்ல கொழுப்புகளின் ஆதாரமாக இருக்கிறது. அவை நல்ல கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொட்டேட்டோ ஃப்ரைஸ்க்கு பதிலாக கேரட் அல்லது வெள்ளரி துண்டுகள்:

top videos

    உப்பு நிறைந்த பிரஞ்சு ஃப்ரைஸ்க்கு நீங்கள் ஏங்குகிறீர்கள் என்றால், உங்கள் உடலுக்கு உண்மையில் தண்ணீர் தேவை என்று அர்த்தம். எனவே, வெள்ளரிக்காய் அல்லது கேரட் போன்ற நீர் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை சாப்பிடுங்கள். இந்த ஆரோக்கியமான தின்பண்டத்தில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனால் உங்களுக்கு ஊட்டச்சத்து நிறைவாக இருக்கும்.

    First published:

    Tags: Healthy Lifestyle, Snacks, Weight loss