Home /News /lifestyle /

நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் இந்த உணவுகள் நம் மன ஆரோக்கியத்தை பாதிக்குமாம்! தெரிந்துகொள்ளுங்கள்

நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் இந்த உணவுகள் நம் மன ஆரோக்கியத்தை பாதிக்குமாம்! தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வெள்ளை மாவு அல்லது மைதா மாவு, வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, நீலக்கத்தாழை சர்க்கரை, சிரப், மிட்டாய் பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.

இந்த நவீன யுகத்தில் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளை கடைப்பிடித்த பிறகும், பலரும் நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு நீங்கள் சாப்பிடும் உணவுகளும் ஒரு காரணமாக அமையலாம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? மன அழுத்தத்தை ஊக்குவிக்கும் உணவுகள் அல்லது நீங்கள் தினமும் உட்கொள்ளும் பானங்கள் உங்களது மனநிலையை மோசமாக்குகிறது. அவை என்ன மாதிரியான உணவு பொருட்கள் என்பதை பின்வருமாறு காணலாம்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்:

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இதய பிரச்சினைகள், நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் போன்ற பாதிப்புகளின் அபாயத்தை அதிகரிப்பதற்கான ஒரு காரணி ஆகும். பொதுவாக இது பல்வேறு டயட் முறைகளில் சேர்க்கப்படுவதில்லை. மனநல சுகாதார அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் நுகர்வு கவலை மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டின் ஆபத்தையும் அதிகரிக்கிறது என்பதை நிரூபித்தது. எனவே வெள்ளை மாவு அல்லது மைதா மாவு, வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, நீலக்கத்தாழை சர்க்கரை, சிரப், மிட்டாய் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க முயற்சிக்கவும். இதற்கு ஆரோக்கியமான மாற்றாக ஓட்ஸ், பழுப்பு அரிசி, குயினோவா, தானியங்கள், முழு அல்லது முளைத்த கோதுமை மாவில் தயாரித்த ரொட்டி ஆகியவற்றை சாப்பிடலாம்.

சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகள்:

இனிப்பான உணவுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கான ஆற்றல் மட்டங்களை பாதிக்கும். இது ஒருவரின் மனநிலையை சமநிலையற்றதாக்கி, கவலை சிக்கல் உணர்வினை ஊக்குவிக்கும். எனவே, பதப்படுத்தப்பட்ட அல்லது அடெட் சர்க்கரை கொண்ட ப்ரிசர்வ்டு பழச்சாறுகள், ஜாம், கெட்ச்அப், டிரஸ்ஸிங் மற்றும் சாஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்க முயற்சிக்கவும். இதற்கு பதிலாக இயற்கையான சர்க்கரை மாற்றீடுகள் அல்லது ஸ்டீவியா, எரித்ரிட்டால் மற்றும் யாகான் சிரப் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும். மேலும் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் அதிக பாதுகாப்பானதாகவும் சர்க்கரைகளைக் கொண்ட தொகுக்கப்பட்ட பழச்சாறுகளை விட மிகச் சிறந்தவையாக இருக்கும்.

காஃபினேட் பானங்கள்:

காஃபின் மூலக்கூறுகள் மூளை ஏற்பிகளுடன் இணைந்து அடினோசினின் பிணைப்பு நிகழ்வை தூண்டுவதன் மூலம் தூக்க சுழற்சியை பாதிக்கிறது. இறுதியில் பதட்டம், தூக்கமின்மையால் தூண்டப்படும் மன அழுத்தத்தை காஃபின் ஏற்படுத்துகிறது. காஃபினின் குறைவான நுகர்வு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் அதிகமான அளவு காபி குடிக்கும் ஒருவராக இருந்தால், நீங்கள் விரைவில் கவலை, பதட்டம் ஆகிய சிக்கல்களுக்கு இரையாகலாம். சாதாரண தேநீர், சில சாக்லேட்டுகள் மற்றும் சுவையான கேக்குகளில் கூட காஃபின் இருப்பதை மறந்துவிடாதீர்கள். அதற்கு பதிலாக சுவையான மூலிகை தேநீர், புதினா, எலுமிச்சை அல்லது தேங்காய் நீரில் இருந்து தயாரிக்கப்படும் கலவையை சுவைத்து பார்க்கலாமே.

ஆல்கஹால்:

ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கடுமையாக சேதப்படுத்தும். துன்பம், மனமுடைதல், மனநிலை மாற்றங்கள் அல்லது கோபத்தை சமாளிக்க பலர் ஆல்கஹால் உதவியைப் பெறுகிறார்கள். மது இனிமையான அல்லது அமைதியான விளைவுகளைத் தருவதாக பலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கு மாறாக, இது உடல் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. ஏனென்றால், ஆல்கஹால் மூளையில் உள்ள செரோடோனின் மற்றும் நரம்பியக்கடத்தி செயல்பாட்டை மாற்றியமைக்கிறது. இதனால் பதட்டம் அதிகரிக்கிறது. மேலும், உடல் நிலை நாளடைவில் மோசமடையும். எனவே, இதற்கு பதிலாக மோஜிடோஸ் அல்லது மாக்டெயில் அல்லது ஆல்கஹால் அல்லாத பியர்களை குடிக்க முயற்சிக்கலாம்.

டிரான்ஸ் கொழுப்பு:

சிப்ஸ் பாக்கெட் அல்லது கோழி நகட்ஸ் சாப்பிடுபவர்கள், ​​உங்களில் மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான பாதிப்பு மிகவும் அதிகம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். டீப் பிரை செய்யப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பொதுவாக ஓரளவு ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுகிறது. அதில் காய்கறி எண்ணெய் மிகவும் திடமான எண்ணெய்யாக மாற்றப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த எண்ணெயை நீண்ட காலம் உபயோகிக்க முடிகிறது. எனவே, டிரான்ஸ் கொழுப்புகளின் அத்தகைய ஆதாரம் கடுமையான இதய பாதிப்பிற்கும், மன பிரச்சினைகளுக்கும் பங்களிக்கும். நெய் அல்லது வெண்ணெய் போன்ற நிறைவுற்ற கொழுப்புகளால் செய்யப்பட்ட தின்பண்டங்களை சாப்பிடுவது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிக உப்பு உள்ளடக்கம்:

உடலில் அதிகப்படியான சோடியம் சிறுநீரகத்தையும் நரம்பியல் அமைப்பையும் சீர்குலைக்கும். மேலும் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் தலையிடுவதன் மூலம் உப்பு மனநிலை கோளாறுகள், மனச்சோர்வு அல்லது உடல் சோர்வினை ஏற்படுத்துகிறது. இருப்பினும், உப்பு உட்கொள்வதால் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகிய பிரச்சனை கொண்டவர்களிடையே எதிர்மறையான உடல் உருவத்தை கூட தரும். எனவே அதிக உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்.
Published by:Archana R
First published:

Tags: Food items, Lifestyle, Mental Health

அடுத்த செய்தி