முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Monsoon food | மழைக்காலத்தில் நீங்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய 5 நார்ச்சத்து உணவுகளின் லிஸ்ட்!

Monsoon food | மழைக்காலத்தில் நீங்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய 5 நார்ச்சத்து உணவுகளின் லிஸ்ட்!

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பி வைட்டமின்கள் உட்பட பல தாதுக்களைக் கொண்டுள்ளது. இதில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. 100 கிராமுக்கு 34 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே இது எடை இழப்புக்கு சிறந்த உணவாக அமைகிறது. இதில் சுமார் 89 சதவீதம் நீர் உள்ளடங்கியுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் போதுமான நீரேற்றம், நார்ச்சத்துக்களை பெற ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பி வைட்டமின்கள் உட்பட பல தாதுக்களைக் கொண்டுள்ளது. இதில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. 100 கிராமுக்கு 34 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே இது எடை இழப்புக்கு சிறந்த உணவாக அமைகிறது. இதில் சுமார் 89 சதவீதம் நீர் உள்ளடங்கியுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் போதுமான நீரேற்றம், நார்ச்சத்துக்களை பெற ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஒழுங்குபடுத்துகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். நார்ச்சத்து உணவுகள் செரிமானமாக நேரமெடுக்கும். இதனால் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்ட ஒருவர் நீண்ட நேரத்திற்கு முழுமையானதாக உணர்வார். நார்சத்து மனித செரிமான அமைப்பில் இருக்கும் நொதிகளால் எளிதில் உடைக்க முடியாத தாவர அடிப்படையிலான உணவின் ஒரு பகுதியாகும். மனித உடலால் நார்சத்து உறிஞ்சப்படும் போது, அது தேவையற்ற உணவை உங்கள் உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகளை பொறுத்தவரை, இது பெருங்குடல் பகுதி மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக ஒரு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கல் மற்றும் மலத்தை வெளியேற்றுவதால் ஏற்படும் வலி போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது. அதன் ஏராளமான செரிமான நன்மைகளைத் தவிர, ஒருவரது டயட்டில் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் அவை எடை இழப்பு முயற்சிக்கு உதவுகிறது.

மேலும், நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் பக்கவாத அபாயத்தை நார்சத்து உணவுகள் வெகுவாகக் குறைக்கின்றன. இரத்த சர்க்கரை அளவை இது ஒழுங்குபடுத்துகிறது. இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த உணவுகளை தற்போது ஆரம்பித்துள்ள மழைக்காலத்தில் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. ஏனெனில், மழை காலங்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இதனை தடுக்க, ஒருவர் தங்களது தினசரி டயட்டில் இந்த முக்கியமான நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றை பற்றி பின்வருமாறு காணலாம்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவும். வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த மூலமாகும். இந்த சுவையான வாழைப்பழத்தை அப்படியே கூட சாப்பிடலாம். அல்லது ஓட்ஸில் கலந்து சாப்பிடலாம். இல்லையெனில் வாழைப்பழ ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.

Must Read | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

ஆளி விதைகள்:

ஆளி விதை பூக்கும் தாவரத்திலிருந்து கிடைக்கின்றன. இந்த சிறிய விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து இரண்டும் அதிகம் நிறைந்துள்ளது. ஆளி விதைகள் பெரியவர்களிலும் நீரிழிவு நோயாளிகளிலும் குடல் இயக்கத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே, உங்கள் வழக்கமான உணவில் ஆளிவிதை சேர்க்க ஒரு சிறந்த வழி ஆளிவிதை ரைதா ரெசிபி தான். அரைத்த ஆளி விதையை கொஞ்சம் தயிரில் கலந்து அதில் மேலும் புதினா மற்றும் உப்பு சேர்த்து சாப்பாட்டு சைடு டிஷ்-ஆக பரிமாறினால் ருசியாக இருக்கும்.

ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்:

ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இரண்டையும் தோலுடன் அப்படியே சாப்பிடும் போது தோலில் உள்ள நார்சத்து உடலுக்கு கிடைக்கிறது. ஏனெனில் பழத்தை விட தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால்தான் அதன் தோல் உரிக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். எப்போதும் பழங்களை அப்படியே சாப்பிடும்போது சிறந்த பலனை தருகின்றன.

ப்ராக்லி:

ப்ராக்லியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இந்த சுவை நிரம்பிய காய்கறியை சிறிது எண்ணெய், உப்பு மற்றும் பூண்டுடன் வெறுமனே வறுத்து சாப்பிடலாம். அவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நட்ஸ்:

பாதாம் முதல் அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. காலையில் சிறிதளவு நட்ஸ்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழ வால்நட் ஸ்மூத்தி, பாலில் நட்ஸ் கலந்து சாப்பிடுவது போன்ற விதவிமான முறையிலும் நீங்கள் நட்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம்.

First published:

Tags: Fiber rich, Healthy Food, Monsoon